Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜாதியையும், மதத்தையும் அடையாளமாக்க விருப்பமில்லை: பார்வதி

21 ஜன, 2016 - 01:09 IST
எழுத்தின் அளவு:
dont-like-Nation,-religion:-Parvati

தமிழில் அறிமுகமான, பூ படத்திலேயே, சிறந்த நடிகைக்கான விருதை பெற்று, முத்திரை பதித்தவர் பார்வதி. மரியான் படத்திலும், தன் நடிப்பு திறனை அழகாக வெளிப்படுத்தினார். சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் பார்வதியுடன் ஒரு சந்திப்பு...


உங்க பெயர் பார்வதி நாயரா, பார்வதி மேனனா? ஒரே குழப்பமாக உள்ளதே?


பார்வதி திருவோத்து கோட்டுவட்டா என்பது தான் என் முழு பெயர். பிறப்பு சான்றிதழில் அப்படித் தான் இருக்கிறது. ஆனால், பாஸ்போர்ட் போன்றவற்றில், வெறும் பார்வதி மட்டும் தான் இருக்கும். மேனன், நாயர் என்றெல்லாம் என்னை எழுதியது மீடியாக்கள் தான். இந்த பெயரை மாற்ற, 10 ஆண்டுகளாக, போராடிட்டு இருக்கேன். ஜாதியையும், மதத்தையும், அடையாளமாக வைத்துக் கொள்ள, எப்போதும் நான் விரும்புவதில்லை.


தமிழில் நிறைய படங்கள் நடிப்பதில்லையே?


பெங்களூர் டேஸ் போன்ற, மனதுக்கு பிடித்த மாதிரியான கதைகள் அமைய வேண்டும். மனதுக்கு பிடிக்காத கதைகளில் நடிக்க விருப்பமில்லை. எனக்கு பிடித்த கேரக்டர்களில் நடிப்பதற்கு, எத்தனை நாள் வேண்டு மானாலும் காத்திருக்க தயார். நல்ல கதைகளுக்காக காத்திருப்பது தப்பு இல்லையே.


பெங்களூர் டேஸ் மலையாளத்திலும், தமிழிலும் நடித்துள்ளீர்கள். என்ன வித்தியாம்?


இரண்டு மொழியிலுமே, படத்தின் கரு ஒன்று தான். அதில், எந்த மாற்றமும் இல்லை. தமிழில் எடுக்கும்போது,ஒரு சில விஷயங்கள் மட்டும், இங்குள்ளவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளன.


மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் மொழியில் நடிக்கிறீர்கள்; எந்த மொழி படங்களில் நடிப்பது எளிதாக உள்ளது?


எந்த மொழிப் படமாக இருந்தாலும், அந்த கேரக்டரில் நான் தெரிவேன். அதற்காக உழைப்பேன். மலையாளம் எனக்கு நன்றாக தெரியும் என்பதால், அந்த மொழிப் படங்கள் சுலபம். ஆனால், கஷ்டத்தையும், இஷ்டமாக ஏற்றுக்கொள்வேன்; நிறைய பயிற்சி எடுப்பேன்.


ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா, ஸ்ரீதிவ்யா என, பலரின் நட்பு, உங்களுக்கு கிடைத்திருக்குமே?


பெங்களூரு நாட்கள் படத்தில் நான் ஹீரோயின் கிடையாது. 'சப்போர்ட்டிங் ரோல்' தான். இந்த படத்தில் குறைந்த நாட்கள் தான் நடித்தேன். ஆனால், கிடைத்த கொஞ்ச நேரத்தில், அவர்களோடு காபி சாப்பிட்டு, கொஞ்ச நேரம் மட்டுமே பேசி, பழக முடிந்தது.




படம் இயக்குவதில் ஆர்வம் உள்ளதா?


படப்பிடப்பின் போது, என் சம்பந்தப்பட்டகாட்சிகள் முடிந்ததும், இயக்குனர் அருகில் அமர்ந்து, என்ன நடக்கிறது என்பதை, பல நாட்கள் கவனித்து இருக்கிறேன். இப்போதைக்கு ஒரு மாணவியாக, அனைத்து விஷயங்களையும் கற்று வருகிறேன். படம் இயக்க முடியும் என்ற நம்பிக்கை, எனக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போது படம் இயக்குவேன்.


தமிழ் ரசிகர்கள் பற்றி?


அவர்களை பற்றி பேசும் போதே என் முகத்தில், மகிழ்ச்சி தாண்டவமாடும். மரியான் படம் வெளியானபோது, தனுஷுடன், ஒரு தியேட்டரில் சென்று படம் பார்த்தேன். அப்போது, ரசிகர்கள் என்னை, அப்படி கொண்டாடினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in