ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் இருக்கும் தமிழ் நடிகைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஹிந்திப் பக்கம் வந்து தமிழ் சினிமாவில் சாதித்தவர்களை விட மலையாளக் கரையோரம் இருந்து வந்து இங்கு சாதித்தவர்களும், சாதித்துக் கொண்டிருப்பவர்களும்தான் அதிகம். கடந்த ஆண்டு தமிழ்த் திரையுலக அறிமுகங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நடிகையாக இருந்தவர் கீர்த்தி சுரேஷ். மலையாளப் படங்களில் நடித்து வந்தவரை 'இது என்ன மாயம்' படம் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார்கள். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பே 'ரஜினி முருகன், பாம்பு சட்டை, தனுஷ் படம்' என சில படங்களில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தற்போது மஞ்சிமா மோகனுக்குக் கிடைத்து வருகிறது. இதனால் கீர்த்திக்கும் மலையாளப் பக்கம் இருந்தே மஞ்சிமாவால் போட்டி உருவாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில்தான் மஞ்சிமா மோகன் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படம் இன்னும் வரவில்லை. அதற்குள் மஞ்சிமாவுக்குப் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டேயிருக்கிறதாம். அவற்றில் இரண்டு படங்களுக்கு இன்று ஒரே நாளில் பூஜை நடைபெற்றது. ஒரு படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார், விக்ரம் பிரபு அதில் நாயகனாக நடிக்கிறார். மற்றொரு படத்தை சுசீந்திரன் இயக்குகிறார், விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயர் வைக்காத இந்த இரண்டு படங்களுக்கும் இன்று பூஜை நடைபெற்றது.
'அச்சம் என்பது மடமையடா' படம் வெளிவந்த பின் மஞ்சிமாவுக்கு தனி வரவேற்பு இருக்கும் என்பதை அறிந்தே அவரைப் புதிய படங்களில் இப்போதே நடிக்க ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.