விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தான் அறிமுகமான லக் இந்தி படத்தில் இருந்தே கவர்ச்சி விசயத்தில் கட்டுப்பாடின்றி வாரி வழங்கி வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில், சில இந்தி படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் ஓவர் டோஸ் கொடுத்ததால் பெண்கள் அமைப்புகள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதோடு, சென்சார்போர்டும் அவர் நடித்த காட்சிகளை கண்டதுண்டமாக கத்தரித்து வருகின்றன.
அந்த வகையில், தமிழில் அவர் கிளாமர் விசயத்தில் அடக்கி வாசித்தபோதும், விஷாலுடன் இணைந்து நடித்த பூஜை படத்திற்கு சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. யு சான்றிதழுக்காக அப்படக்குழு போராடியபோது, ஸ்ருதிஹாசனின் கிளாமரை முன்வைத்து இதற்கு யுஏதான் தர முடியும் என்று அந்த சான்றிதழைதான் வழங்கினர். அந்த வகையில், டைரக்டர் ஹரி இயக்கிய அனைத்து படங்களும் யு சான்றிதழ் பெற்று வந்த நிலையில், பூஜை படம் மட்டுமே யுஏ சான்றிதழ் பெற்றது.
ஆனால் இந்த விசயத்தில் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த வந்த ஸ்ருதிஹாசன், தான் நடிக்கிற படங்களுக்கும் யு சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று இப்போது ஆசைப்படுகிறாராம். அதோடு தனது படங்களுக்கு குடும்பம் குடும்பமாக வரவேண்டும் என்றும் நினைப்பவர், இனிமேற்கொண்டு கிளாமரில் கட்டுப்பாடு வைத்து நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதனால் டைரக்டர்களிடம் கதை கேட்கும்போதே தனது புதிய கண்டிசனையும் கூறி வருகிறார் ஸ்ருதிஹாசன்.