Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இசை என்றால் இளையராஜா - மனம் திறக்கும் இசையமைப்பாளர்கள்

16 ஜன, 2016 - 15:28 IST
எழுத்தின் அளவு:
Music-directors-shares-about-Ilayaraj-1000

இசைக்கென்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் இசைஞானி இளையராஜா. 1976ம் ஆண்டு வெளிவந்த 'அன்னக்கிளி' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கடந்த 40 வருடங்களில், 7 மொழிகள், 5000 பாடல்கள், 600க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், 300க்கும் மேற்பட்ட இயக்குனர்கள், 200க்கும் மேற்பட்ட பாடலாசிரியர்கள், 400க்கும் மேற்பட்ட பாடகர்கள், எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள் இளையராஜாவின் இசை சாம்ராஜ்ஜியத்தில் அடங்கியுள்ளனர். இவரது சாதனையின் மணி மகுடத்தில் இப்போது அவரது ஆயிரமாவது படமாக பாலாவின் தாரை தப்பட்டை வெளியாகியுள்ளது.


இசையில் ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் சாதனை குறித்து இசையமைப்பாளர்கள் சிலர் மனம் திறந்துள்ளனர். இதோ அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்...




கார்த்திக் ராஜா


எனக்கு தெரிந்த வரை அவருக்கு பிடித்த மாதிரி இன்னும் படம் பண்ணவில்லை, அவருடைய அவ்வளவு இசையையும் பயன்படுத்தவில்லை என்று தான் நினைக்கிறேன். அவரது ஒவ்வொரு பாட்டையும் நான் கேட்கும் போது இன்னும் கற்று கொண்டு தான் இருக்கிறேன். என் அப்பா என்பதையும் தாண்டி இசையால் தொட முடியாத இடத்தில் இருக்கிறார் அவர்.


பவதாரிணி


நேரத்தையும், கடமை உணர்வையும், கொடுத்த வேலையையும் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். ஆயிரம் படங்கள் பண்ணுவது இந்தக்காலத்திற்கு எல்லாம் சாத்தியமா என்று யோசிக்க வைக்கிறது. அப்பா எனக்கு சொல்லும் அறிவுரை நேரத்தை வீணாக்காதே, எதையாவது யோசித்து இசையில் கொண்டு வர பழகு என்பார். அவர் சொல்வதை செய்து வந்தாலே நாம் ஜெயிக்க முடியும் என்று நினைக்கிறேன்.




ஜிப்ரான்


கர்நாடக இசையையும், கிளாசிக் இசையையும் ஒன்று சேர்த்து தன் இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இளையராஜா. இரண்டு இசையையும் கையாண்டார். ஒவ்வொரு பாடலுக்கும் தன்னையே நிறைய பரிசோதனைக்கு உட்படுத்தியவர். ஒருநாள் ஹங்கேரி இசைக்குழுவிடம் நான் அவரை நேரில் பார்க்கும்போது, அன்றைக்கு மட்டும் தான் பார்த்த வேலையை நான் பார்த்து மிரண்டு போனேன். ஆயிரம் படங்கள் என்பது எனக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாத்தியமில்லை. ராஜா சார் ஒரு லெஜெண்ட்.


சத்யா


இப்போது எல்லாம் படங்கள் பண்ணுவதே பெரிய விஷயம். ஆனால் ஆயிரம் படம் என்பது சாதனை, இதனை யாராலும் பிரேக் செய்ய முடியாது. அவர் நம்ம தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதால் பெருமைப்படுகிறேன். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்வது எனக்கு பெருமை.


ரகுநந்தன்


ஒரு பாடலில் எப்படி சுரம் சேர்க்கலாம், அந்தப்பாடல் எப்படி வெளிவரும், அதை ரசிகர்கள் எப்படி விரும்புவார்கள் என்பதை அவர் முன்னரே அறிந்தவர். அவருக்கு எல்லாமே அத்துப்படி. எல்லா வகையான இசையையும் அன்றே அவர் செய்துவிட்டார். அவரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது. உலக இசையமைப்பாளர்களில் அவரும் ஒருவர். ஹாலிவுட் இசையமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் அவருக்கு நம்ம ராஜா நிகரானவர். தமிழ்நாட்டிற்கு கடவுள் கொடுத்த பரிசு இளையராஜா. அவரைப்போல் கடின உழைப்பும், 24 மணிநேரமும் இசையை பற்றி சிந்திக்கும் ஒரு மனிதர் இனி பிறக்கப்போவது கிடையாது.


கே


சின்ன வயதில் அவரது இசையை கேட்டு வளர்ந்து இருக்கிறேன். என்னை மாதிரி ஒரு இசையமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய உந்துதல் சக்தி அவர். இசையில் அவர் தொடாத விஷயங்களே இல்லை. எங்களுக்கு எல்லாம் ஒரு பாதை அமைத்து கொடுத்துள்ளார். என்னுடைய இசையில் அவரது பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர் வாழும் காலத்தில் நானும் பயணம் செய்வது பெருமை.


தாஜ்நூர்


நான் இசையமைப்பாளராக காரணமே ராஜா சார் தான். ஆயிரம் படங்களுக்கு இசையமைப்பது என்பது பெரிய விஷயம். காதலுக்கு இசையால் ஒரு வடிவம் கொடுத்ததே அவரது பாடல்கள் தான். ராஜாவின் இடத்தை நிரப்புவது இனி கடினம்.




எஸ்.எஸ்.குமரன்


உலகத்திலேயே ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த கலைஞன் இவராகத்தான் இருப்பார். இந்தியா தாண்டி போற்றப்பட வேண்டிய கலைஞர். இளையராஜா நம் பொக்கிஷம். அவரைப்போல் இனி யாரும் வர முடியாது. அவருக்கு இன்னும் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தான் நான் நினைக்கிறேன். இதே அவர் வேறு ஒரு ஊரிலோ, அல்லது வேறு நாட்டிலோ பிறந்திருந்தால் அவரது நிலைமை இன்னும் வேறுமாதிரியாக இருக்கும். அவர் போற்றப்பட வேண்டியவர்.




விவேக் சங்கர்


ராஜா சார் என்னை போன்ற இளையவர்களுக்கு நூலகம் போன்றவர். அவர் சாதித்தது சாதரணமான விஷயமல்ல. அவரிடம் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவர் என்னுடைய ரோல் மாடல்.


எல்.வி.கணேஷ்


தமிழ் சினிமாவின் அதீத திறமை கொண்டவர் இளையராஜா. அவர் சாதித்தது தமிழ் சினிமாவுக்கே பெருமை. செய்கின்ற தொழிலையும், ரசிகர்களின் ரசனைக்கேற்ப பாடல்கள் கொடுத்த அவரது உழைப்புக்கு ஏற்ற ஒரு அங்கீகாரம் தான் இந்த ஆயிரம் படங்கள். அவ்வளவு சீக்கிரம் யாராலும் இசையால் அவரை நெருங்கிவிட முடியாது.




ஸ்டீவ் வாட்ஸ்


மனிதனால் ஆகாத காரியம் இவர் செய்த சாதனை. ஆயிரம் படங்களை விட அவருடைய ஒரு படத்தில் ஆயிரம் சப்தங்களை சொல்லியிருக்கிறார். அத்தனை மனித உள்ளங்களையும் இசையால் திருப்திப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை. இளையராஜா மனிதர் அல்ல அவர் ஒரு சக்தி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in