நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' | மாஸ்டர் 2ம் பாகத்தை விரும்பும் லோகேஷ் | ராம் பொத்தினேனி படத்தில் உபேந்திரா | இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி |
கேளடி கண்மணி தொடரில் நாயகனாக நடித்து வருபவர் அர்ணவ். அந்த தொடரில் யுகி என்ற பெயரில் அவர் நடித்து வரும் கேரக்டர் பெரிய அளவில் ரீச்சாகிக்கொண்டிருக்கிறது. மேலும், ஸ்கிரிப்ட்டுக்கேற்ப நடித்தபோதும், தனது நடிப் புக்கு இணையதளத்தில் ரசிகர்கள் கொடுக்கும் கமெண்ட்ஸைப் பொறுத்து நடிப்பை மாற்றிக்கொண்டே வருகிறாராம் அர்ணவ்.
இதுபற்றி அவர் கூறும்போது, கேளடி கண்மணி தொடர் இப்போது இன்னும் நல்ல விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு பிரச்சினையில் நான் ஜெயிலுக்கு போக நேர்ந்த பிறகு வெளியே வந்திருக்கிறேன். நான் உள்ளேயிருந்தபோது நடந்த சில சம்பவங்களால் கதை இன்னும் சூடு பிடித்திருக்கிறது. அதோடு சீரியலைப்பார்க்கும் நேயர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, கேளடி கண்மணி என்று பேஸ்புக்கில் ஒரு பக்கம் உள்ளது. சீரியலைத் தொடர்ந்து பார்ப்பவர்கள், கதையோட்டத்தைப் பற்றியும், நடிக்கும் எங்களது நடிப்பு பற்றியும் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். இதை இயக்குனரும், நானும் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அப்போது அழுது நடிக்கும் காட்சிகள் அதிகமாக வேண்டாம் என்று நேயர்கள் கருத்து தெரிவித்திருக்கும்பட்சத்தில் பின்னர் அந்த காட்சிகளை குறைத்து ஆக்சன், காமெடி என நேயர்கள் எதிர்பார்க்கிற மாதிரி கதையோட்டத்தை உருவாக்குகிறார் டைரக்டர். எனது நடிப்பைப் பொறுத்தவரை ரொம்ப செண்டிமென்டாகவே இருக்க வேண்டாம். ஆக்சனும் வேண்டும் என்றார்கள். அதனால் அதற்கேற்ப டைரக்டர் கதையில் மாற்றம் செய்து எனக்கான ஆக்சன் காட்சிகள் அதிகரித்துள்ளார். ஆக, ரசிகர்களின் விருப்பம் அறிந்து கேளடி கண்மணி சீரியல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதனால் டிஆர்பி பெரிய அளவில் உயர்ந்து கொண்டே போகிறது.
அதேபோல், நேயர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்ப நடிப்பதால் எனது நடிப்புக்கும் ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். அதனால் நான் ஏதாவது திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றால் அங்கு வந்திருக்கும் சினிமா நடிகர்களுக்கு இணையாக என்னையும் மொய்த்துக்கொள்ளும் ரசிகர்கள் என்னுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்கிறார்கள். இது எனக்கு பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது. அதோடு நல்ல சீரியல்களில் நடித்தால் நேயர்களின் அபிமானத்தை முழுசாக பெறலாம் என்பது புரிகிறது.
அதேசமயம் இந்த சீரியல் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதுவே ஒரு 7 மணிக்கு மேல் இருந்திருந்தால் மிகப்பெரிய அளவில் இந்த சீரியல் ரீச்சாகியிருக்கும். அதோடு 8 மணிக்கு மேல் பிரைம் டைமில் ஒளிபரப்பானால் இந்த சீரியலை எந்த சீரியலும் அடிச்சிக்க முடியாது. இப்படி சொல்லும் அர்ணவ், சினிமாவில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறாராம். சீரியலுக்கு மாதத்தில்15 நாள் ஒதுக்கி விட்ட நான், மீதமுள்ள நாட்களை சினிமாவுக்கே செலவிடப்போகிறேன். அதனால் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன். மேலும், தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கணேஷ் வெங்கட்ராம் நடித்த வேடத்தில் நடிக்க என்னை கேட்டிருக்கிறார்கள். இதுதவிர இன்னொரு படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறேன் என்கிறார்.