2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவின் பல்துறை வித்தகர் கமல்ஹாசன். இன்றைக்கு சினிமாவை பற்றிய பல அரிய விஷயங்களை தெரிந்து வைத்திருப்பவர். இந்திய சினிமா மட்டுமல்லாது, உலக சினிமாவை பற்றியும் நன்கு அறிந்தவர். தமிழ் சினிமாவின் உலகநாயகனாக வலம் வரும் கமல்ஹாசனுக்கு இப்போது ஒரு புதிய கவுரவம் கிடைக்க போகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் கமல் உரையாற்ற உள்ளார்.
பிப்ரவரி 6ம் தேதி நடைபெற உள்ள விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு, உரையாற்ற உள்ளார். இவ்விழாவிற்கு அழைக்கப்பட்டு உள்ள முக்கிய பேச்சாளர்களில் கமலும் ஒருவர். இதன் மூலம் ஹார்வர்ட் பல்கலை.,யில் உரையாற்றும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை கமல் பெற உள்ளார்.
மேலும் இவ்விழாவில், கமல் தவிர இந்தியா சார்பில் காங்., எம்.பி., சசிதரூர், ஐசிஐசிஐ., வங்கியின் சாந்தா உள்ளிட்ட சிலரும் கலந்து கொள்ள உள்ளனர்.