சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |
டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளர் இயக்கும் எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறார் நடிகை அஞ்சலி. படத்தில் அஞ்சலிக்கு வேலைக்கு போகும் நடுத்தர குடும்பத்துப் பெண் கேரக்டர். எங்கேயும் எப்போதும் படம் பற்றி அஞ்சலி அளித்துள்ள பேட்டியில், இந்த படம் வித்தியாசமான கதையம்சம் உள்ள படமாக இருக்கும். இப்போதும் நான் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களைத்தான் தேர்வு செய்கிறேன். கிளாமர், சினிமாவில் தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதை முழுவதும் தவிர்த்த கேரக்டர்கள் தொடர்ந்து கிடைப்பதில்லை. அளவுக்கு மீறிய கிளாமர் காட்சிகளை இதுவரை தவிர்த்து வந்திருக்கிறேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். "கற்றது தமிழ், "அங்காடித் தெரு படங்கள் என் சினிமா வாழ்க்கையில் முக்கிய அடையாளங்களாக இருக்கும். இனி வரும் படங்களும் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வேன். தமிழில் "கருங்காலி, "மகாராஜா ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மலையாளத்தில் ஜெயசூர்யாவுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். தெலுங்கு படங்களில் அதிக வாய்ப்புகள் வருகின்றன. அங்கு பெரிய ஹீரோக்களின் படங்களுக்குதான் மதிப்பு. தமிழில் அப்படி இல்லை. கதைகளுக்கும், கேரக்டர்களுக்கும்தான் மதிப்பு. இதுதான் பல நடிகைகளுக்கு தமிழ் சினிமா மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது, என்று கூறியுள்ளளார்.
இந்த படத்தில் நடிகை அனன்யாவும் நடிக்கிறார். அஞ்சலியும், அனன்யாவும் ஒன்றிரண்டு காட்சிகளில்தான் சேர்ந்து நடிக்கிறார்களாம். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.




