மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த படம் அழகு குட்டி செல்லம். விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனர் அந்தோணி திருநெல்வேலி தயாரித்திருந்தார். சார்லஸ் இயக்கி இருந்தார். அகில், கருணாஸ், ஜான் விஜய், வினோதினி மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருந்தார், வேத் சங்கர் இசை அமைத்திருந்தார்.
குழந்தைகளால் ஏற்படும் பிரச்னைகளுக்கு குழந்தைகளைக் கொண்டே தீர்வு சொல்லும் அருமையான திரைக்கதையை கொண்ட படம். இந்தப் படத்துடன் 5 படங்கள் வெளிவந்ததால் சரியான தியேட்டர் கிடைக்காமல் தமிழ்நாடு முழுவதும் 90 தியேட்டர்களில் மட்டும் வெளியானது. அதிலும் ஒரு சில தியேட்டர்களில் பகல் காட்சி மட்டும்தான். படத்தின் தயாரிப்பாளர் அந்தோணி பத்திரிக்கையாளர் காட்சியில் கண்ணீர் விட்டு அழுதார்.
படம் பரவலான பாராட்டுக்களை பெற்றது. மீடியாக்கள் படத்தை பற்றி உயர்வாக பேசியது. சினிமா உலகை சேர்ந்தவர்களும் படத்தை பற்றி சிலாகித்து பேசினார்கள். ஆனால் படத்தை பார்க்க மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. மக்களிடம் கொண்டு சேர்க்கும் வலிமையான விளம்பரம் இல்லாமல் போனதே இதற்கு காரணம். இந்த வாரம் வேறு படங்கள் இல்லாதால் நிச்சயம் மக்கள், 'அழகு குட்டி செல்லம்' படத்தை தேடி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். பொங்கல் படங்கள் இன்னும் 7 நாட்களில் வந்துவிடும். அப்போது அழகு குட்டி செல்லத்தை தூக்கி தியேட்டருக்கு வெளியே வைத்துவிடுவார்கள்.