ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வித்தியாசமான தோற்றத்துடன் லொடுக்கு பாண்டியாக அறிமுகமான கருணாஸ் காமெடி நடிகனாக வளர்ந்தார். உப்புமா படங்கிளில் இருந்து உச்ச நடிகர் படம் வரைக்கும் நடித்தார். திடீரென்று அவருக்கு ஹீரோ ஆசை வரவே திண்டுக்கல் சாரதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் வெற்றி பெறவே இனி ஹீரோவாகத்தான் நடிப்பது என்று முடிவு செய்தார். அதன் பிறகு அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, ரகளபுரம், லொடுக்கு பாண்டி படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் தோல்வி அடைந்தது. அனைத்தும் சொந்த படங்கள் என்பதால் பொருளாதரத்திலும் சிக்கல் வந்தது. இனி ஹீரோ வேண்டாம் என்று காமெடியனாக தொடர முடிவு செய்தார்.
ஆனால் மீண்டும் காமெடி வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் வந்தது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் சிபாரிசில் டார்லிங் படத்தில் நடித்தார். அது வெற்றி பெறவே அடுத்த ரவுண்டை ஆரம்பித்தார் கருணாஸ். சமீபத்தில் வெளிவந்த அழகுகுட்டி செல்லம் படத்தில் அவரது நடிப்பு பரவலாக பேசப்படுகிறது. தற்போது நடிகர் சங்கத்தின் துணை தலைவராகவும் ஆகியுள்ள நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்தில் கருணாஸ்தான் காமெடியன். பேஸ்புக் மோகன் என்ற கேரக்டரில் நடிக்கிறார். டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டர்சன் இயக்கும் , 'எனக்கு இன்னோரு பேரு இருக்கு' படத்தில் ஜி.வி.பிரகாசின் நண்பராக நடிக்கிறார். தற்போது வெளிவர இருக்கும் புகழ் படத்தில் ஜெய்யின் அண்ணனாக குணசித்ர கேரக்டரில் நடித்திருக்கிறார். காமெடியன், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்ற இரண்டு பாதையில் பயணம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் கருணாஸ்.