14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
டார்ஜான் எனும் காட்டுவாசி மனிதனைப் பற்றிய கதை காமிக் நாவலாக 1912ம் அண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து பல ஹீரோக்கள், பல அனிமேஷன் திரைப்படங்கள், சீரியல்கள் டார்ஜான் கதையை படமாக செய்தனர். தற்போது, மீண்டும் 'த லெஜண்ட் ஆப் டார்ஜான்” என்ற படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
பேட்டில்ஷிப், ஜூலேண்டர் படங்களில் நடித்த அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட் இந்த படத்தில் டார்ஜானாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் பார்ப்பவர்களை ஆச்சர்யபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. பிளேனட் ஆப் ஏப்ஸ் படத்தில் தத்ரூபமாக குரங்குகளை சிஜி செய்திருந்தது போல், இந்த படத்திலும் குரங்குகள் சிஜி அட்டகாசம்.
எட்கர் ரைஸ் இயற்றிய 'டார்ஜான் ஆப் ஏப்ஸ்' என்ற நாவலை தழுவியே இந்த திரைப்படத்தின் திரைக்கதையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வசூலையும் ரசிகர்கள் வட்டாரத்தையும் கொண்டுள்ள ஹாரிபாட்டர் படங்களை இயக்கிய டேவிட் யேட்ஸ் இயக்கத்தில் உருவாகி வரும் டார்ஜான் படம் அடுத்த ஆண்டு ஜூலை 1ம் தேதி திரைக்கு வருகிறது. மீண்டும் மிரட்ட வருகிறான் காட்டு ராஜா டார்ஜான்.