தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பீப் பாடல் தொடர்பான சர்ச்சையில், சிம்புவுக்கு பிடி இறுகுகிறது, தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் சார்பில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிம்பு எழுதி, பாடி, அனிரூத் இசையமைப்பில் உருவாகியுள்ள மிகவும் கேவலமான, கொச்சையான வார்த்தைகளால் உருவாகியுள்ள 'பீப் பாடல்'-க்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருவர் மீதும் வழக்குகள் தொடர்ந்து பாய்ந்து கொண்டிருக்கிறது. கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சார்பில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக தான் கைதாக கூடும் என்ற அச்சத்தில் முன் ஜாமின் கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் சிம்பு, சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பிலும், பெண்கள் சார்பிலும் சிம்புவுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று வாதிக்கப்பட்டது. ஜாமின் மீதான வழக்கை ஜன.,4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி ராஜேந்திரன். மேலும், கோவை போலீஸ் முன்பு சிம்பு ஆஜராகும் தேதியையும் ஜன.5ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார், அதேசமயம் அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்று நீதிபதி கூறினார்.
இதனையடுத்து அவர் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்தச்சூழலில் நேற்று இரவு சென்னை, தி.நகரில் உள்ள சிம்பு வீட்டில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிம்பு அங்கு இல்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைமறைவாக உள்ள சிம்புவை கைது செய்ய போலீஸ் தரப்பில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிம்பு அவரது நண்பர் வீடுகளிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆகவே அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.