ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன், காதலன், பாய்ஸ், இந்தியன், முதல்வன், சிவாஜி, எந்திரன் ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். அப்படி அவர்கள் காம்பினேஷனில் உருவான அந்த படங்கள் அனைத்துமே ஹிட்டானதோடு, பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. இதனால் ஷங்கர்-ஏ.ஆர்.ரகுமான் இணையும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில், சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக ரஜினியுடன் ஷங்கர் இணைந்திருக்கும் 2ஓ என்று சொல்லப்படும் எந்திரன்-2 படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹாலிவுட் தரத்துக்கு இணையாக உருவாக்கப்படும் இந்த பிரமாண்ட படத்தில் இந்தி நடிகர் அக்சய் குமாரும் இன்னொரு நாயகனாக நடிக்கிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், பாடல்களையும் கம்போஸ் செய்து ரெக்கார்டிங் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். அதோடு, தனது படங்களில் எப்போதுமே புதிய பாடகர்களுக்கு அதிகமாக வாய்ப்பளித்து வரும் ரகுமான், இந்த படத்தில் ஈழத்தை சேர்ந்த தமிழ் பாடகர்கள் சிலருக்கு வாய்ப்பளித்துள்ளார்.
அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த சாய், அர்ஜூன், தன சிங் ஆகிய பாடகர்கள் எந்திரன்-2வில் பாடியுள்ளனர். இவர்கள் ஏற்கனவே பல ஆல்பங்களில் பாடியிருக்கிறார்களாம். நீண்டகாலமாக ரகுமானின் இசையில் பாட விருப்பம் தெரிவதிது வந்ததை அடுத்து இந்த படத்தில் அவர்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.