ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சண்டை இயக்குனர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் தயாரித்துள்ள படம் அஞ்சல, விமல், நந்திதா, பசுபதி நடித்துள்ளனர், தங்கம் சரவணன் இயக்கி உள்ளார், ரவி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோபி.சுந்தர் இசை அமைத்துள்ளார். வருகிற 24ந் தேதி வெளிவருகிறது.
அஞ்சல ஒரு டீக்கடையை மையமாக கொண்ட படம். ஒரு கிராமத்தின் ஆதார சுருதியாக இருக்கும் டீக்கடை ஒன்று பரம்பரை பரம்பரையாக நடந்து வருகிறது. நல்லது கெட்டது எல்லாமே அந்த டீக்கடையிலிருந்துதான் தொடங்கும். சாலை விரிவாக்கம் என்ற பெயரில் டீக்கடையை அகற்ற சிலர் முயற்சிக்கிறார்கள். அதை அந்த ஊர் மக்கள் விமல் தலைமையில் அதை எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் என்கிற கதை.
இதற்காக "டீ போடு...." என்ற புரமோசன் சாங் ஒன்றை இசை அமைப்பாளர் கோபிசுந்தர் உருவாக்கி உள்ளார். இது தற்போது யூ டியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. டீ எஸ்டேட்டில் தொடங்கி டீ தூள் எப்படி தயாராகிறது. என்ன என்ன விதமாக டீ போடப்படுகிறது என்பதை துல்லியமாக காட்டும் இந்தப் பாடலை இசை அமைப்பாளர் தேவா பாடியிருக்கிறார். இதில் ஜீவா, தம்பி ராமய்யா, சூரி, பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, சசிகுமார், விக்ரம்பிரபு, ஜெயம்ரவி, கார்த்தி, சிவகார்த்திகேயன், ரகாவா லாரன்ஸ், சமுத்திரகனி, ரேபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் ஸ்டைலில் டீ குடித்தபடி ஆடியுள்ளனர். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.