ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளையராஜா - வைரமுத்து கூட்டணியில் வெளிவந்த எத்தனையோ பாடல்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் கூட்டணி மீண்டும் இணையவே இணையாதா என்ற ஏக்கத்தை இருவரையும் நேசிக்கும் உண்மையான ரசிகர்கள் இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள். இருந்தாலும் 'இடம் பொருள் ஏவல்' படத்திற்காக வைரமுத்துவையும், இளையராஜாவின் மகனான இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவையும் இணைத்து வைத்த பெருமை அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமிக்குக் கிடைத்தது. அந்தப் படத்தின் பாடல்களும் வெளிவந்து ரசிகர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
அப்படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் சூழ்நிலையில், சீனு ராமசாமி இன்று ஆரம்பித்துள்ள 'தர்மதுரை' படத்திற்காக மீண்டும் வைரமுத்து - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியை சேர்த்து வைத்துள்ளார். இப்படத்திற்கான பாடல்கள் பதிவு கடந்த மாதம் ஆரம்பமாகி முடிவுற்றுள்ளது. “'தர்மதுரை' படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தந்திருக்கும் பாடல்களை கேட்டுப் பார்த்து மயங்கினேன், அடுத்த இசைஞானி யுவன் என்றது என் மனம்,” படத்தின் பாடல்களைப் பற்றி இயக்குனர் சீனு ராமசாமி பாராட்டியுள்ளார்.