ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
செல்லமே தொடங்கி பல தொடர்களில் நடித்தவர் தேவிப்பிரியா. தற்போது களத்து வீடு, லட்சுமி வந்தாச்சு உள்பட சில தொடர்களில் நடித்து வருகிறார். இந்த தொடர்களிலும் அவர் வழக்கம்போல் வில்லி வேடங்களிலேயே நடித்து வருகிறார்.
இந்த தொடர்களில் தனது கேரக்டர் பற்றி தேவிப்பிரியா கூறுகையில், நான் நிஜத்தில் ஓரளவு கலகலப்பாக இருப்பேன். ஆனால் சண்டை சச்சரவுக்கு சென்றதே இல்லை. அந்த வகையில் அமைதியான பெண் என்றுதான் பெயர் எடுத்திருக்கிறேன். ஆனால், சீரியல்களைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே நெகடீவ் ரோல் என்றாலே கூப்பிடு தேவிப்பிரியாவை என்கிற நிலையாகி விட்டது. நான் நடித்த வில்லி வேடங்கள் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனதே இதற்கு காரணம். அதனால் நானும் வரவேற்பு கிடைக்கிற பாதையிலேயே செல்வோமே என்று விட்டு விட்டேன்.
அதேசமயம் பாசிட்டீவான வேடங்களும் எனக்கு அவ்வப்போது கிடைத்து வருகின்றன. அந்த மாதிரி சீரியல்களில் என்னை முழுசாக மாற்றிக்கொண்டு நடித்து வருகிறேன். இந்நிலையில், தற்போது லட்சுமி வந்தாச்சு, களத்து வீடு போன்ற தொடர்களில் நெகடீவ் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். ஒரு தொடரில் நகரம், இன்னொன்றில் கிராமம் என மாறுபட்ட கதைக்களங்கள். என்னுடன் நடிக்கும் கேரக்டர்களுடன் எதிரும் புதிருமாக நடிக்கிற வேடங்களே என்பதால், கதைகளின் சூழலுக்கேற்ப இப்போது நடிக்கும் புதிய வில்லி வேடங்களில் வெளுத்து வாங்கி வருகிறேன். அதற்கேற்ப நல்ல டயலாக்குகள் அமைந்திருப்பதால் என்னால் நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ண முடிகிறது என்கிறார் தேவிப்பிரியா.