ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் சில படங்களில் நடித்துள்ள தெலுங்கு நடிகரான 'பாகுபலி' ராணா டகுபதி சென்னை மக்களுக்கான நிவாரணத்திற்காக 'மன மெட்ராஸ் கோசம்' என்ற பெயரில் ஆரம்பித்த சேவை, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இடைவிடாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று கூட மருத்துவப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். அவருடன் இணைந்து அல்லு அர்ஜுன், மஞ்சு மனோஜ், நானி, நவ்தீப், காஜல் அகர்வால், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட இளம் தெலுங்கு நடிகர், நடிகைகள் சேவைப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
'மன மெட்ராஸ் கோசம்' சேவைக்கு தெலுங்கு மக்களும் தெலுங்குத் திரையுலகினரும் மட்டுமின்றி ஹிந்தித் திரையுலகத்தினரும் அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். சென்னையில் உள்ள நடிகர்களுடனும், சில தன்னார்வல அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு இந்த நிவாரண உதவிகளை ராணா குழுவினர் வழங்கி வருகிறார்கள்.
ராணா டகுபதியின் இந்த சேவைக்கு பல நட்சத்திரங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷனும் ராணாவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “மிகப் பெரிய தொண்டு, தக்க சமயத்தில் நல்ல முயற்சியுடன் வழங்குவது, பெருமையாகவும், உத்வேகமாகவும் உள்ளது ராணா” என ஹிருத்திக் குறிப்பிட்டுள்ளார்.