ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வழக்கு எண் படத்தின் மூலம் அறிமுகமான மனீஷா யாதவ். ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஒரம், பட்டைய கிளப்பணும் பாண்டியா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களில் நடித்தார். என்றாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிளாமராக நடித்து பார்த்தார், லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்துப் பார்த்தார் அப்படி இருந்தும் வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் தற்போது அவர் தனது சொந்த ஊரான பெங்களூருவில் டிசைனிங் ஷோம் ஒன்றை திறந்து விட்டார். மனீஷா சுரேஷ் யாதவ் டிசைனிங் என்ற பெயரில் தொடங்கி உள்ள இந்த ஷோரூமில் பிரத்யேக ஆடை வடிவமைப்பு சேவை கிடைக்கும். இதனை மனீஷாவே செய்து கொடுக்கிறார்.
"சின்ன வயதிலிருந்தே எனக்கு டிசைனராக வேண்டும் என்கிற ஆசை. இதற்காக நிறைய படித்தேன். இப்போது என் தோழிகளுடன் இணைந்து இதனை தொடங்கி இருக்கிறேன். விரைவில் பேஷன் ஷோ ஒன்றையும் நடத்த இருக்கிறேன்" என்கிறார் மனீஷா.