Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்வாதியின் திடீர் முடிவு!

05 டிச, 2015 - 10:21 IST
எழுத்தின் அளவு:
Swathis-sudden-decision

தமிழில் ஜெய் நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் நடித்தவர் ஸ்வாதி. அது ஹிட் படம் என்றபோதும் அடுத்தபடியாக படவாய்ப்பில்லாமல் இருந்த அவருக்கு மீண்டும் போராளி படத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார் சசிகுமார். அதையடுத்து சில வருட இடைவெளிக்குப்பிறகு இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்த ஸ்வாதி, மறுபடியும் வடகறி படத்தில் ஜெய்யுடன் நடித்தார். அந்த படம் தனக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்த ஸ்வாதிக்கு அதிர்ச்சி தோல்வியாக அமைந்து விட்டது. அதனால் இப்போது தெலுங்கில் ஒரு ஹாரர் படத்தில் நடித்து வருகிறார் ஸ்வாதி. இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரை தொடர்பு கொண்டபோது, அந்த படங்களின் கதைகள் பெரிதாக இல்லாததால் நடிக்க மறுத்து விட்டார்.


அதோடு, இதற்கு முன்பு ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் வரை பிசியாக நடித்து வந்தார் ஸ்வாதி. ஆனால் இனிமேல் அவர் அப்படி நடிக்கப்போவதில்லையாம். வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் மெகா படமாக நடிக்கப்போகிறாராம். அதோடு மெகா ஹீரோவின் படம் இல்லையென்றாலும், தன்னை மையப்படுத்தும் கதைகளாக மட்டுமே நடிக்கப்போகிறாராம். இதன்காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் பல படங்களை கேட்ட ஸ்வாதி எந்த கதையும் தனக்கு பிடிக்கவில்லை என்று திருப்பி அனுப்பி விட்டார். அதோடு, ஒரு டைரக்டரிடம் என்னை மையப்படுத்தும் கதையுடன் வாருங்கள். எனக்கு திருப்திகரமான கதாபாத்திரமாக இருந்தால் சம்பளத்தைகூட குறைத்துக்கொண்டே நடிக்க தயாராகயிருக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். ஸ்வாதியின் இந்த திடீர் முடிவுக்கு கைகொடுக்க இன்னும் தயாரிப்பாளர்கள்தான் முன்வரவில்லையாம். காரணம், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அவரது மார்க்கெட் மந்தமாகவே இருப்பதால் தயங்கி நிற்கிறார்களாம். இருப்பினும், நம்பிக்கையுடன் தான் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் வருமென்று காத்திருக்கிறாராம் ஸ்வாதி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in