ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் ஹீரோவான ஹிருத்திக் ரோஷன் பாகுபலி பாணியில் தற்போது மொகஞ்சதாரோ என்ற பிரமாண்ட சரித்திர கதையில் நடித்து வருகிறார். லகான், ஜோதா அக்பர் போன்ற பல வெற்றி படங்களை இயக்கிய ஆசுடொஷ் கௌரிகர் இந்த படத்தை இயக்குகிறார். படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றில் 20 அடி முதலையுடன் நாயகன் ஹிரித்திக் சண்டையிடுகிறார்.
ஆ.. என வாயைப் பிளந்து ஆச்சர்யபடும் நமக்கு, அது வெறும் ரிமோட் கன்ட்ரோலர் பொம்மை முதலையாம். பின்ன, ஒரிஜினல் முதலையோட தண்ணியில சண்டை போட முடியுமா என்ன? உயர்தர சிஜியின் மூலம் அதை தத்ரூபமாக திரையில் நமக்கு நிச்சயம் காட்சிப்படுத்தி பிரமிப்பை ஏற்படுத்துவார்களா என பொறுத்திருந்து பார்ப்போம். ஏரோப்பிளேனையே கிரிஷ் படத்தில் தூக்கியவராச்சே நம்மாளு.