ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படம் பல மாதங்களுக்க முன்பே ரெடியாகிவிட்டது.
காக்கா முட்டை படத்தைப்போல் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி அங்கே விருதுகளை வாங்கிய பிறகு தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது வெற்றிமாறனின் விருப்பம்.
அதன்படியே பல திரைப்பட விழாக்களுக்கு விசாரணை படத்தை அனுப்பினார்கள்.
அண்மையில் வெனீஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட விசாரணை படத்துக்கு விருதும் கிடைத்தது.
சந்திரகுமார் என்ற ஆட்டோ டிரைவர் எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
விசாரணை படத்தை டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளியிட வேண்டும் என்று விரும்பினாராம் தனுஷ்.
அதற்கு வெற்றிமாறன் உடன்படவில்லை.
டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நிறைய படங்கள் வெளியாக இருப்பதால் தன்னுடைய விசாரணை படம் கண்டுகொள்ளப்படாமல் போய்விடும் என்ற தன் அச்சத்தைத் தெரிவித்திருக்கிறார்.
அவர் கடைசியாய் இயக்கிய ஆடுகளம் படம் 2011ல் வெளியானது.
ஏறக்குறைய 4 வருடங்களாக அவரது படம் வெளியாகவில்லை.
எனவே தான் இயக்கிய விசாரணை படம் சரியான நேரத்தில் வெளியாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் வெற்றிமாறன்.
அவரது கோரிக்கைக்கு ஏற்ப டிசம்பர் 4 அன்று விசாரணை படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
எனவே தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்தி வைத்திருக்கிறார் தனுஷ்.