ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் தனது தீபாவளி வெளியீடான பிரேம் ரத்தன் தான் பாயோ படம் 200 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருக்கும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில், இருதினங்களுக்கு முன் சல்மானின் தந்தையான சலிம் கானின் 80வது பிறந்த நாள் விழாவை படு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார், சல்மான் கான்.
பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் விழாவினை கொண்டாடினார். பாலிவுட் பிரபலங்களான அர்பாஸ் கான், சோஹைல் கான் மற்றும் சல்மானின் முன்னாள் காதலியான சங்கீதா பிஜாலனியும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சல்மான் கான் தனது அடுத்த படமான சுல்தான் பட பிடிப்பில் ஈடுபட்டு வருவதால், மீசை, தாடியுடன் இருக்கும் சுல்தான் பட கெட்டப்பிலே கலந்து கொண்டார்.