ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள படம் பசங்க 2. பாண்டிராஜ் இயக்கி உள்ளார், சூர்யாவும், அமலாபாலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். நகர்புறத்து பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மீது படிப்பை திணித்து அவர்களை சுயத்தை சிதைக்கும் பெற்றோர்களின் கதை. பசங்க 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தாலும் ஏற்கெனவே வந்த பசங்க படத்தின் கதைக்கும் இதற்கும் தொடர்பில்லை. முதலில் ஹைக்கூ என்ற தலைப்புதான் வைக்கப்பட்டிருந்தது. அது ஜப்பானிய சொல் என்பதால் வரிவிலக்கிற்காக பசங்க 2 என மாற்றப்பட்டது. குழந்தைகளின் நண்பனாகவும் குழந்தை மனோதத்துவ நிபுணராகவும் சூர்யா நடித்திருக்கிறார். அரோல் குரோலி இசை அமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதன் படப்பிடிப்புகள் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. தீபாவளிக்கே வெளிவருவதாக இருந்தது. இயக்குனர் பாண்டிராஜ் மீது மெரீனா படத் தயாரிப்பாளர் கொடுத்திருந்த கடன் பாக்கி புகாரால் தாமதமானது. அதன் பிறகு 2டி நிறுவனத்திடமிருந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கியது. அதன் பிறகு அதனை தமிழ்நாட்டில் வெளியிடும் தியேட்டரிக்கல் உரிமத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ் நிறுவனம் வாங்கியது. இப்படி பல கைகள் மாறியதால் அதனாலும் தாமதம் ஏற்பட்டது. இப்போது அனைத்து பிரச்னைகளும் முடிந்து படம் வருகிற டிசம்பர் 4ந் தேதி வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.