மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி ஹெட் ஸ்டோரி படத்திற்கு போட்டியாக வரவிருக்கும் படம் “ஆங்கிரி இந்தியன் காடஸ்”. ஸம்ஸாரா என்ற ஆங்கில டாகுமென்டரி தயாரித்து புகழ்பெற்ற பான் நளின் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே, பல நாடுகளில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த படம்.
படத்தின் இயக்குனரான பான் நளின், பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக் கானின் தீவிர ரசிகர். அவர் ஏற்கனவே படத்தின் ட்ரெய்லரை ஷாரூக் கானுக்கு காண்பிக்க, ட்ரெய்லரை பார்த்த ஷாரூக் அவரை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இந்நிலையில் ஷாரூக்காக பிரத்யேக காட்சியை திரையிட அவர் தற்போது ஏற்பாடு செய்துள்ளார்.
இப்படத்தின் கதை 7 பெண்களைப் பற்றியதாகும். நாயகி தன் தோழிகளை அழைத்துக் கொண்டு கோவா செல்கிறாள். அங்கு தனக்கு விரைவில் திருமணம் ஆக போகின்றது, அதற்கான விருந்து அளிக்கும் விழா தான் என்கிறாள். அதன் பிறகு அந்த பேச்சுலர் பார்ட்டி எப்படி திசை மாறி படத்தின் வேகத்தை கூட்டுகிறது என்பதே கதை.
சந்தியா மிருதுல், தனிஷ்தா சாட்டர்ஜி, அனுஷ்கா மன்சந்தா, அம்ரித் மகேரா, ராஜ்ஸ்ரீ தேஷ்பாண்டே மற்றும் பவ்லின் குஜ்ரல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.