ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் ஒரு பரபரப்பான வாரமாக அமைய நிறைய வாய்ப்பிருக்கிறது. 27ம் தேதி “வாலிபராஜா, உப்பு கருவாடு, இஞ்சி இடுப்பழகி, 144, கரையோரம்” ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. கடைசி நேரத்தில் ஏதாவது மாற்றம் வந்தாலும் வரலாம்.
அதே தினத்தில் 'தங்கமகன்' படத்தின் இசை வெளியீடும், 'கெத்து' படத்தின் டிரைலர் வெளியீடும் நடைபெற உள்ளது. இந்த இரண்டும் நேரடியாக இணையதளங்கள் மூலம் வெளியிடப்படவே அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்த வாரத்தை மேலும் சிறப்பிக்க 26ம் தேதி விஜய் நடித்து வரும் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் அட்லீ நேற்று அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே இந்தப் படத்தின் தலைப்புப் பற்றி பலவிதமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தத் தகவலின் படி “காக்கி, வெற்றி, தாறுமாறு” ஆகியவற்றில் ஏதாவது ஒன்று தலைப்பாக அறிவிக்கப்படுமா, அல்லது வேறு ஏதாவது தலைப்பு வெளியாகுமா என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.