ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கமல்ஹாசன் தயாரிப்பு, நடிப்பில் வெளிவந்துள்ள 'தூங்காவனம்' படம் இந்த மழைக்காலத்தில் மிதமான வெற்றியைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கில் 'சீகட்டி ராஜ்ஜியம்' என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவிலும் தமிழில் கிடைத்ததைப் போலவே மிதமான வரவேற்புதான் கிடைத்துள்ளதாம்.
தன்னுடைய இதற்கு முந்தைய சில படங்களைப் போல அல்லாமல் தெலுங்கில் இந்தப் படத்தை நேரடியாகவே படமாக்கி வெளியிட்டுள்ளார். தெலுங்கிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர்களான த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், ஆகியோரையும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். இதனால் படத்திற்கு ஒரு டப்பிங் படத்தை விட அதிகப்படியான வரவேற்பே கிடைத்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசனின் அடுத்த படம் பற்றிய தகவல் பத்து நாட்களுக்கு முன்பாகவே வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமலாவுடன் கமல்ஹாசன் இணைந்து நடிக்க உள்ள அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு 'அம்மா நானா ஆட்டா' என பெயரிட்டிருக்கிறார்களாம். அதற்குத் தமிழில் 'அப்பா அம்மா விளையாட்டு' என்று அர்த்தம். தமிழில், கண்டிப்பாக அப்படிப் பெயர் வைக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை மலையாள இயக்குனரான ராஜீவ்குமார் இயக்க உள்ளார். இவர் கமல்ஹாசன், ஜெயராம், சித்தாரா நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த 'சாணக்யன்' மலையாளப் படத்தின் இயக்குனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பழைய வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைகிறது.