ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மீடியாக்களில் என்ன செய்தி வேண்டுமானாலும் வரட்டும் எதைப் பற்றியும் கவலையில்லை என்று காதல் ஜோடி ஒன்று நானும் ரௌடிதான் வெற்றியை வெளிநாடுகளில் சுற்றுலாவாகக் கொண்டாடி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா பற்றி அனைத்து மீடியாக்களுமே பேசிவிட்டன. ஆனால், சம்பந்தப்பட்ட அவர்கள் அது தங்களது தனிப்பட்ட விவகாரம் என்று சொன்னாலும் யாருமே கேட்பதாக இல்லை. அதிலும் எப்படி அவர்களது காதல் விவகாரம் ஒரு வெளிநாட்டுச் சுற்றுலாவின் புகைப்படமாக வெளிவந்ததோ அதே போல தற்போதும் ஒரு புகைப்படம் உலா வந்து கொண்டிருக்கிறது.
அது சமீபத்தில் எடுத்த புகைப்படமா அல்லது எப்போதோ எடுத்த புகைப்படமா என்பது பற்றி கூட இந்நேரம் சிலர் ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். அனைத்து கிசுகிசுக்களையும் தாண்டி நயன்தாராவை தங்களது அடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு பல இயக்குனர்கள் தயாராகவே இருக்கிறார்கள். இந்த ஆண்டில் நயன்தாரா கொடுத்துள்ள வெற்றி அப்படி. எந்த நாயகனுடனும், எந்தக் கதாபாத்திரத்திலும் அப்படியே டெய்லர் மேட் ஆக பொருத்திக் கொள்ளும் நடிப்புத் திறமை நயன்தாராவிடம் இருப்பதே அதற்குக் காரணம்.
தமிழில் எப்படியோ, தெலுங்குத் திரையுலகில் இன்னமும் பல முன்னணி ஹீரோக்கள் தங்களது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களாம். நயன்தாரா கைவசம் தமிழில் கார்த்தியுடன் நடிக்கும் காஷ்மோரா படம் மட்டுமே உள்ளது. தமிழில் இது நம்ம ஆளு, திருநாள் ஆகிய படங்களும், மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் புதிய நிர்ணயம் படமும் விரைவில் வெளிவர உள்ளது. அடுத்த ஆண்டு நயன்தாராவின் கால்ஷீட் யாருக்கு என்பது விரைவில் தெரிந்துவிடும்.