மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஆண்ட்ரியா 2005ம் ஆண்டு பாடகியாகத்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். அந்நியன் படத்தில் இடம்பெற்ற "கண்ணும் கண்ணும் நோக்கியா..."தான் முதல் பாடல். பாடகியாக அறிமுகப்படுத்தியவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2007ம் ஆண்டு தான் பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் நடிகையானார்.
தற்போது பாடகியாக ஆண்ட்ரியா ஆஃப் செஞ்சுரி அடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50 பாடல்களை பாடி உள்ளார். மெல்லிசை படத்தில் அவர் பாடியிருக்கும் "டேக்...மீ..." என்ற பாடல் அவரது 50வது பாடல். கண்ணும் கண்ணும் நோக்கியா முதல் டேக் மீ வரை ஆண்ட்ரியா பாடிய அத்தனை பாடல்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவா... (சர்வம்), உன் மேல ஆசைதான்...(ஆயிரத்தில் ஒருவன்), இதுவரை இல்லாத உணர்விது...(கோவா), நோ மணி நோ மணிடா (வானம்), ஒருமுறை... (முப்பொழுதும் உன் கற்பனைகள்), கூகுள் கூகுள்... (துப்பாக்கி), மாமா டவுசர்...(சூது கவ்வும்), வாடா வாடா பைய்யா... (பிரம்மன்), நீ சன்னா நீ மூனா (நண்பேண்டா) ஆகியவை முக்கியமான பாடல்கள்.