அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் | தமிழ் படத்தில் மாலத் தீவு நடிகை | பிளாஷ்பேக்: பக்தி படத்தில் விஜயகாந்த் | பிளாஷ்பேக்: வில்லத்தனத்தில் மிரட்டி, வறுமையில் வாடிய நடிகை | ஐமேக்ஸ் தியேட்டர்கள் : 'ஜனநாயகன், தி ராஜா சாப்' படங்களுக்குப் புதிய சிக்கல் | மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி |

'வேதாளம்' திரைப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. கடந்த 10ம் தேதியே தீபாவளியன்று திரைக்கு வந்து இன்று வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனால், இன்னும் படம் 100 கோடியில் இணைந்ததா இல்லையா என்பது பற்றி யாருமே பேசாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
படம் வெளிவந்த முதல் நாளிலேயே 15 முதல் 20 கோடி வரை வசூலானதாகச் சொன்னார்கள். அதன் பின் சராசரியாக ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் என்று பார்த்தால் கூட கடந்த ஏழு நாட்கள் வசூல் 105 கோடியைத் தொட்டிருக்க வேண்டும். 10ம் தேதி படம் வெளியான பிறகு 12ம் தேதியன்று மட்டுமே வட தமிழ்நாட்டில் பலத்த மழை இருந்தது. அன்று மட்டும் ஓரளவிற்கு வசூல் குறைந்திருந்தாலும் 100 கோடியாவது இந்நேரம் வந்திருக்கும். இது வெறும் தியேட்டர் நிலவரம் மட்டுமே.
படத்தின் சாட்டிலைட் உரிமைகள், மற்ற உரிமைகள் ஆகிய வியபாரத்தையும் கணக்கிட்டால் படம் இந்த ஒரு வாரத்தில் 100 கோடியைத் தொட்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படியே அதில் சில கோடிகள் குறைவாக இருந்திருந்தாலும் இன்னும் சில நாட்களில் 100 கோடியைத் தொட வாய்ப்புகள் அதிகம் என நாம் விசாரித்த திரையுலக வியாபார அனுபவஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த ஆண்டின் முக்கியமான கமர்ஷியல் வெற்றியாக 'வேதாளம்' படம் ஏற்கெனவே அமைந்துவிட்டது. படத்தை வாங்கிய பலருக்கும் லாபம்தான் என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.




