ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 59-வது படத்தின் படப்பிடிப்பு 80 சதவிகிதத்தை எட்டிவிட்டதாக சொல்கிறார்கள். இந்த படத்துடன் ரஜினியின் கபாலி படத்தையும் தயாரித்து வரும் வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு, மிகுந்த பொருட்செலவில் இந்த இரண்டு மெகா படங்களையும் தயாரித்து வருகிறார். அதனால் விஜய் படப்பிடிப்பு நடக்கும் சென்னை, கபாலி படப்பிடிப்பு நடக்கும் மலேசியா என்று பறந்து கொண்டேயிருக்கிறார்.
மேலும், ரஜினியின் கபாலி படத்திற்கு முன்பே விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. சென்னை மட்டுமின்றி, கோவா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் அவ்வப்போது சென்று படப்பிடிப்பை நடத்தி வந்தனர். ஆனால், தீபாவளிக்கு முன்பு கபாலியின் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கிய ரஞ்சித், மலேசியாவில் முகாமிட்டு பாதி படத்திற்கு மேலே அங்கு படமாக்கிவிட்டுத்தான் திரும்புவார் என்கிறார்கள். அதையடுத்து சென்னையிலுள்ள சில ஸ்லம் லொகேசன்களில் கபாலி இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கிறதாம்.
இந்த நிலையில், விஜய் படப்பிடிப்பு, கபாலி படத்திற்கு முன்பே முடிந்து விடும் என்கிறார்கள். இதற்கிடையே இறுதிகட்ட பணிகளும் தற்போது பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. என்றாலும், ரஜினியின் கபாலி படத்தைதான் விஜய் படத்திற்கு முன்பாக வெளியிடுகிறாராம் தயாரிப்பாளர் தாணு. அந்தவகையில், ரஜினி படத்தை ஏற்கனவே சொன்னது போன்று தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந்தேதியும், விஜய் படத்தை அஜீத் பிறந்த நாளான மே மாதம் 1-ந்தேதியும் வெளியிட முடிவு செய்துள்ளாராம்.