கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

'வேதாளம்' படத்தை அஜித் ரசிகர்கள் மிகப் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக ஆக்கிவிட்டனர். விமர்சன ரீதியாக படத்தைப் பற்றி சில எதிர்மறை கருத்துக்கள் எழுந்தாலும், அஜித் ரசிகர்களை படம் நிறையவே திருப்திப்படுத்திவிட்டது. அதோடு படத்தில் உள்ள அஜித் - லட்சுமி மேனன் இடையிலான அண்ணன் தங்கை சென்டிமென்ட் குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களையும், நிறையவே கவர்ந்துவிட்டது.
சென்னை உட்பல பல வட மாவட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தாலும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் குறையவில்லை என்றே தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நேற்று இரவு காசி தியேட்டர் உட்பட பல திரையரங்குகளில் நைட் ஷோவிற்குக் கூட தியேட்டர்கள் ஹவுஸ்புல்லாக இருந்ததாம்.
கொட்டும் மழையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் போரடிக்கும் என பலரும் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள திரையரங்குகளில் 'வேதாளம்' படம் பார்க்க வந்துள்ளதே இந்தக் கூட்டத்திற்குக் காரணம் என்கிறார்கள். அதிலும் பலர் 'வேதாளம்' படம் வெளிவந்த பின் வந்த முதல் சனி, ஞாயிறு என்பதால் முன்னரே முன்பதிவு செய்து வைத்துள்ளார்கள். மழையிலும் அந்த டிக்கட்டுகளை கேன்சல் செய்யாமல் வந்து படம் பார்த்திருக்கிறார்கள்.
கடந்த ஆறு நாட்களில் 'வேதாளம்' படத்தின் வசூல் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்துள்ளதாகவே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.