Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பண்டிகையில் விஜயலட்சுமி நடிக்கவில்லை

15 நவ, 2015 - 14:25 IST
எழுத்தின் அளவு:
Vijayalakshmi-not-acting-in-Pandigai

இயக்குனர் அகத்தியனின் மகளும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரிக்கும் படம் பண்டிகை. அவரது காதல் கணவர் பெரோஸ் இயக்குகிறார். கிருஷ்ணா, ஆனந்தி, சரவணன் நடிக்கிறார்கள். படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் விஜயலட்சுமி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிப்பதாகவும், இதுவே அவரது கடைசி படம் என்றும் கூறப்பட்டது. இதனை மறுக்கிறார் இயக்குனர் பெரோஸ்..

"என் மனைவி விஜயலட்சுமி தயாரிப்பு பணிகளை மட்டுமே கவனிக்கிறார். இதில் அவர் நடிக்க வில்லை. அவர் தொடர்ந்து நடிப்பது அவரது சுதந்திரம் அதில் நான் தலையிட மாட்டேன். பண்டிகை ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். அநாதையாக வளரும் ஒரு இளைஞன் அடிதடி மூலம், பயமுறுத்தல் மூலமும்தான் அனைத்தையும் பெற முடியும் என்று நினைக்கிறார். அப்படித்தான் ஒரு பெண்ணின் காதலையும் பெறுகிறான். பிறகுதான் அவனுக்கு காதல் கிடைத்தது பயத்தால் அல்ல அன்பால் என்பதை உணர்கிறான்.


அதன் பிறகு தன் கோபம், மிரட்டல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்கு திருப்புகிறான். ஆனால் இந்த சமூகம் அதனை அனுமதிக்க மறுக்கிறது. பிறகு எப்படி அவன் மாறுகிறான் என்கிற கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது" என்கிறார் பெரோஸ்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in