யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்! | சூர்யா 46வது படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடியா? | கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - வெள்ளிவிழா ஆண்டில் ரீரிலீஸ் அறிவிப்பு | பிளாஷ்பேக்: இயக்குநர் பி ஆர் பந்துலுவின் 'டூப்'பாக சாண்டோ சின்னப்ப தேவர் நடித்த “திலோத்தமா” |
சென்னை:தமிழ் திரையுலக பழம்பெரும் இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. உடல் நிலை சரியில்லாமல் காலை 7 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர் இரவு 7.30 காலமானார்.
மறைந்த பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சாக்கோட்டை கிராமத்தில், கடந்த 1929ம் ஆண்டு பிறந்தார். சீனவாசன் நாயுடு- விஜயத்தம்மாள் தம்பதியினருக்கு 8வது மகனாக பிறந்தார்.
1954ம் ஆண்டு சரவணபவ பிக்சர் நிறுவனத்தினர், தாங்கள் தயாரிக்கும்படத்திற்கு கதை தேடினர். அப்போது இயக்குநர் ஸ்ரீதர் எதிர்பாராதது என்ற தலைப்பிலும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தம்பி என்ற பெயரிலும் கதை அனுப்பினர். இதில் ஸ்ரீதர் எழுதிய கதை தேர்வானது. அப்போது, ஸ்ரீதர் தனது படத்திற்கு பாடல் எழுத கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை பரிந்துரை செய்தார்.
இதிலிருந்து கோபாலகிருஷ்ணன் சினிமா வாழ்க்கை ஆரம்பமானது. 1956ம் ஆண்டு மாதர் குல மாணிக்கம் படத்திற்கு ஸ்ரீதருக்கு வசனம் எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனது கதையை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் திருத்தினால் அதனை ஏற்றுக்கொள்ளும்படி தயாரிப்பாளரிடம் கூறினார். பின்னர் 1958ம் ஆண்டு சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்திற்கு ஸ்ரீதர் திரைக்கதை வசனம் எழுதினார். அப்போது அந்த படத்திற்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பாட்டு எழுத வாய்ப்பு கொடுத்தார். கடந்த 1960ல் வங்கமொழியில் தயாரான ஜோக் பி ஜோக் படத்தை இயக்குநர் கிருஷ்ணசாமி தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். அதற்கு வசனம் எழுத ஸ்ரீதரிடம் கேட்கப்பட்டது. ஸ்ரீதர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த படம் சிவாஜி நடித்த படிக்காத மேதை வெற்றியடைந்தது. இதன் பின்னர் 1961ல் மாடர்ன் தியேட்டர் தயாரித்த குமுதம் படத்திற்கு வசனம் எழுதினார். 1963ல் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தன இயக்கிய கற்பகம் படத்தில் நடிகை கே.ஆர்.விஜயாவை அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து கற்பகம் என்ற பெயரில், வடபழநியின் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினார்.
1966ல் நடிகை பத்மினி சினிமாவை விட்டு விலகி அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். பின்னர் மீண்டும் சினிமாவில் வந்து, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சித்தி படத்தில் நடித்தார். அதே ஆண்டில் சிவாஜி நடித்த செல்வம், கண்கண்ட தெய்வம், பேசும் தெய்வம் படங்களை இயக்கினார். 68ம் ஆண்டு பணமா பாசமா என்ற வெற்றிப்படத்தை இயக்கினார். மேலும் உயிரா மானமா என்ற படத்தையும் இயக்கினார். 69ல் குலவிளக்கு. 70ல் மாலதி, குலமா, குணமா போன்ற படங்கயை இயக்கிய கோபாலகிருஷ்ணன், 71ல் பக்தி படத்தை இயக்க ஆரம்பித்தார். ஆதிபராசக்தி என்ற படத்தை இயக்கினார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தது. 72ல் குறத்தி மகன், வாழையடி வாழை படங்களையும் இயக்கினார். 73ல் நத்தையில் முத்து என்ற படத்தை இயக்கினார். அந்த படம் நடிகை கே.ஆர்.விஜயாவிற்கு 100வது படம் ஆகும். 80ம் ஆண்டுகளில் படிக்காத பண்ணையார் படத்தை இயக்கினார். இவர் கடைசியாக விஜயகாந்த், பானுபிரியா நடித்த காவியத்தலைவன் படத்தை இயக்கினார். இவருக்கு கே.எஸ்.ஜி., வெங்கடேஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் சினமா துறையில் தான் உள்ளார். இவர் நல்ல கதை வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குநராகவும் திகழ்ந்தார். இவர் பெண்களின் கண்ணீரை நம்பியே படம் எடுத்தவர் ஆவார்.
ஏனைய இயக்குனர்களிலிருந்து இவர் மாறுபட்டவர். எப்போதும் எளிமையையே விரும்புவார். படப்பிடிப்புத் தளங்களில் கதர் வேட்டி, முண்டா பனியனுடனேயே காணப்படுவார். 1975ம் ஆண்டு கலைமாமணி விருதையும், 1980ம் ஆண்டு அண்ணா விருதையும் பெற்றார் .
மறைந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் உடல் சென்னை, கே.கே.நகரில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு அன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது.