ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமாரின் அடுத்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஷாம்லி ஹீரோயின். த்ரிஷா டெரர் வில்லியாக நடிக்கிறார். இது பற்றி த்ரிஷா கூறியதாவது:
நடிக்க வந்து 10 வருடத்துக்கு மேலாச்சு. பெரும்பாலும் ஹீரோவுடன் டூயட் பாடுற கமர்ஷியல் ஹீரோயினாகத்தான் நடிச்சிருக்கேன், அபியும் நானும், விண்ணைத் தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் படங்களில் வித்தியாசமாக நடித்திருக்கிறேன். இனி இதுபோன்று வித்தியாசமான படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன்.
எனது திறமையை வெளிப்படுத்துகிற மாதிரியான கேரக்டர்களில் தான் இனி நடிப்பேன். தூங்காவனம் படத்தில் கமல் சார் நடிக்க அழைத்த போது "இது ஹாலிவுட்டில் ஏஞ்சலினா ஜுலி மாதிரி ஆக்ஷன் கேரக்டர். என்னிடம் நிறைய அடிவாங்க வேண்டியதிருக்கும் என்று சொன்ன உடனேயே ஓகே சொல்லிவிட்டேன். அதே போல அரண்மணை 2ல் வித்தியாசமான த்ரிஷாவை பார்க்கலாம். நாயகி படத்தில் 80களில் இருந்த ஒரு நடிகையாக நடிக்கிறேன். படையப்பா நீலாம்பரி மாதிரி ஒரு பவர்புல் வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறுகிறது என்கிறார் த்ரிஷா.