விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் | வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம்வரும் த்ரிஷா | 25வது நாளில் 'குட் பேட் அக்லி' | தலைவனாக விஜய் சேதுபதி, தலைவியாக நித்யா மேனன்! | தீபாவளிக்கு வெளியாகும் பைசன்! | 'தொடரும்' படம் தமிழ் பதிப்பு ரிலீஸ் தேதி அறிவிப்பு! |
வேதாளம் படத்தின் வசூல் விவரங்களைக் கேட்டவர்கள் இவ்வளவு பெரிய தொகை சாத்தியமில்லையே என்று சந்தேகம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஒரேநாளில் தமிழகமெங்கும் உள்ள தியேட்டர்களில் 15 கோடியை வேதாளம் படம் வசூல் செய்திருப்பதை குறித்தே இந்த சந்தேகம் எழுந்தது. விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களிடம் கேட்டால் 15 கோடி வசூல் சாத்தியமானது எப்படி என்று விளக்குகின்றனர்.
தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் பல ஊர்களில் உள்ள தியேட்டர்களில் அதிகாலை 1.30 மணியிலிருந்தே வேதாளம் படத்தின் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டனவாம். வேதாளம் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமயை வாங்கியது பெரிய இடத்து சமமந்தப்பட்ட நிறுவனம் என்பதால் எவ்வித இடையூறும் இல்லாமல் பல ஊர்களில் 7 காட்சிகள் கூட திரையிடப்பட்டதாக தகவல். அது மட்டுமல்ல டிக்கெட் கட்டணமும் 500ஐ தொட்டிருக்கிறது. அதன் காரணமாகவே ஒரே நாளில் 15 கோடி வசூல் சாத்தியமானதாக சொல்கின்றனர். இந்திய அளவில் 3 நாட்களில் வேதாளம் படம் சுமார் 43 கோடியை தொட்டிருக்கிறது.
முதல்நாள் வசூல்:
தமிழ்நாடு - 15.5 கோடி
கேரளா - 2.10 கோடி
கர்நாடகா - 2 கோடி
மற்ற மாநிலங்கள் - 1.10 கோடி
மொத்தம் (இந்திய அளவில்) - 20.25 கோடி
2ம் நாள் வசூல்:
தமிழ்நாடு - 9 கோடி
கேரளா - 1.70 கோடி
கர்நாடகா - 1.45 கோடி
மற்ற மாநிலங்கள் - 90 லட்சம்
மொத்தம் (இந்திய அளவில்) - 13.05 கோடி
3ம் நாள் வசூல்:
தமிழ்நாடு - 7 கோடி
கேரளா - 1கோடி
கர்நாடகா - 85 கோடி
மற்ற மாநிலங்கள் - 50 லட்சம்
மொத்தம் (இந்திய அளவில்) - 9.35 கோடி
இந்திய அளவில் அடுத்த 2 நாட்களில் வேதாளம் படம் சுமார் 20 கோடிகளை வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கின்றனர் விநியோகஸ்தர்கள்.