ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இணையதள டிவி சேனல் யூப் டிவி. இந்த இணையதள டிவி., பிரபல கிரிக்கெட் வீரர் பிரைன் லாரா பற்றிய நிகழ்ச்சி ஒன்றை ஒளிப்பரப்ப இருக்கிறது. நவம்பர் 6ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி ஐந்து எபிசோடுகளாக வெளியாக உள்ளது. ''பிரைன் லாரா இஸ் நாட் அவுட்'' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சியை யூப் டிவியின் நிறுவனர் உதய் ரெட்டி தயாரித்துள்ளார். இவர் தயாரித்துள்ள முதல் நிகழ்ச்சி இதுவாகும்.
இந்த நிகழ்ச்சி எதைப்பற்றி சொல்லபோகிறது.?
லாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, கிரிக்கெட்டில் அவர் கடந்து வந்த பாதை, கிரிக்கெட் பிரியர்களுக்கு அவர் கொடுக்கும் அறிவுரை கொடுக்க உள்ளார். அதோடு 46 வயதில் மீண்டும் அவர் கிரிக்கெட் விளையாட உள்ளார். அமெரிக்காவில் ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் நடைபெற உள்ளது. சச்சின் தலைமையிலான பிளாஸ்டர்ஸ் அணியும், ஷேன் வார்ன் தலைமையிலான வாரியர்ஸ் அணியும் மோத உள்ளது. இந்த கிரிக்கெட்டில் விளையாட உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் லாரா எப்படி தயாராகி வருகிறார் போன்ற விஷயங்களும் சொல்லப்பட இருக்கிறது.
இதுதொடர்பாக லாரா கூறியிருப்பதாவது... மீண்டும் விளையாடுவதை எண்ணும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பை விட இப்போது ரசிகர்களை காண மிகவும் ஆவலாய் இருக்கிறேன். யூப் டிவி.க்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
இணையதளம் வாயிலாக, ஸ்மார்ட் டிவி, ஆன்ட்ராய்டு வகை போன்கள் உள்ளிட்டவைகளில் யூப் டிவியின் இந்த நிகழ்ச்சியை காணலாம்.