ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிம்பு-நயன்தாராவை மீண்டும் ஜோடி சேர்த்து பாண்டிராஜ் இயக்கிய படம் இது நம்ம ஆளு. ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்த அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. அதனால் சில மாதங்களாக காத்திருந்த பாண்டிராஜ், பின்னர் சூர்யா தயாரிப்பில் பசங்க-2 என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தில் பிந்துமாதவி லீடு ரோலில் நடித்தபோதும், சூர்யா-அமலாபாலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிறுவர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள அந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் பாண்டிராஜ்.
இதற்கிடையே, விஷாலிடமும் கதகளி என்ற கதையை சொல்லி ஓகே செய்தவர், தற்போது அவரை வைத்து அந்த படத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். கிராமத்து கதையில் உருவாகும் அந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் கேத்ரின் தெரசா நடித்துள்ளார். அதோடு, சூரி படம் முழுக்க விஷாலுடன் வரும் காமெடியனாக நடித்திருக்கிறார். இதற்கு முன்பு விஷால்-சூரி கூட்டணி அமைத்த படங்களை விட இந்த படத்தில் அவர்களது காமெடி செம கலக்கலாக படமாக்கப்பட்டு வருகிறதாம். அதோடு, இப்படம் முழுக்க வேஷ்டி அணிந்து நடித்துள்ளாராம் விஷால்.
இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் போன்று, காதல் காமெடி என்று செல்லும் இந்த படத்தின் க்ளைமாக்சில் ஒரு நல்ல கருத்தினை சொல்லி முடிக்கிறாராம் பாண்டிராஜ்.