அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் புரூஸ்லீ. முந்தைய படத்துக்கு வந்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார். பல குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் இயக்குகிறார். தெலுங்கு புரூஸ்லீயில் ராம்சரண் தங்கையாக நடித்த க்ரீத்தி கர்பெண்டா ஹீரோயின்.
நானும் ரவுடிதான் படத்தில் தன்னை ஒரு ரவுடியாக நினைத்துக் கொண்டு விஜய் சேதுபதி பில்டப் கொடுப்பது மாதிரி இதில் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னை புரூஸ்லீயாக கருதிக் கொண்டு கொடுக்கும் லந்துகள்தான் கதை. கூடவே ரோமியோ ஜூலியட் படத்தில் ஜெயம்ரவி டி.ஆரின் ரசிகராக நடித்த மாதிரி இதில் ஜி.வி.பிரகாஷ் மன்சூரலிகானின் தீவிர ரசிகராக நடிக்கிறார்.
மன்சூரலிகான் படம் வெளியாகும் அன்று தியேட்டரில் பேனர் வைத்து கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவார். ஒரு காட்சியில் மன்சூரலிகான் நடிக்கிறார். ஒரு ரசிகராக அவரை ஜி.வி.பிரகாஷ் சந்திப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெறுகிறது.