ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் அக்டோபர் 9ம் தேதியும் தமிழில் அக்டோபர் 16ம் தேதியும் வெளியான படம் 'ருத்ரமாதேவி'. குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா, நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, சிறப்புத் தோற்றத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளைச் சேர்த்து சுமார் 80 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் சுமார் 55 கோடி ரூபாய் வசூலித்த படம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்ற மாநிலங்களில் 15 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. வெளிநாடுகளில் சுமார் 10 கோடி வரை வசூலித்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பாகுபலி' படம் வெளிவந்த பின் மீண்டும் ஒரு சரித்திரப் படமாக இந்தப் படம் அமைந்தாலும் அனுஷ்காவுக்காகவும், அல்லு அர்ஜுனுக்காகவும் ஓடுகிறது என்கிறார்கள். படத்தில் இவ்வளவு அழகான அனுஷ்காவை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு அவரை மிகவும் அழகாகக் காட்டியிருப்பது இளைஞர்களை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது. சிறப்புத் தோற்றமாக வந்தாலும் அல்லு அர்ஜுன் வரும் காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பது அவருடைய ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 'பாகுபலி' படம் அளவிற்கு இந்தப் படம் வசூலிக்க வாய்ப்பில்லை என்றாலும் 100 கோடியை எப்படியாவது தொட்டுவிடும் என்றே சொல்கிறார்கள். பல முறை தள்ளிப் போடப்பட்ட இந்தப் படம் சொன்ன தேதியில் சரியாக வந்திருந்தால் வசூலின் நிலவரம் இன்னும் அதிகம் இருந்திருக்கும் என்றே வினியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.