மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
பொன்னர் சங்கர் படத்தை பார்த்த பலரும் பாராட்டி வரும் நிலையில் ஒரு சிலர் ஒரு சில குறைகளையும் சுட்டிக் காட்டி வருகிறார்கள். இப்படியொரு பிராமாண்ட படத்தை கொடுத்த தியாகராஜன் பாராட்டு மழையில் நனைந்தபோதிலும், எந்தவித ஈகோவும் இல்லாமல் சில திருத்தங்களை செய்ய முன்வந்திருக்கிறார். படத்தை பார்த்த சில திரையுலக விஐபிக்கள் முக்கியமாக ஒரேயொரு குறையை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அதாவது குஷ்புவும், ஜெயராமும் இறந்த பின்னர் தனது பெற்றோர் இறந்து விட்டதை பார்த்து பிரசாந்த் அதிர்ச்சி அடையாதது பற்றி விமர்சித்திருக்கிறார்கள். அட்லீஸ்ட் அவர்கள் மரணம் குறி்தது ஒரு டயலாக்காவது பேசியிருக்கலாம் என்றும் விமர்சனம் வந்துள்ளது. இதையடுத்து அந்த காட்சியை மட்டும் மீண்டும் படம்பிடித்து படத்தில் இணைக்க முடிவு செய்த தியாகராஜன், இதற்கான சூட்டிங்கையும் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்.