ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்ராஸ் படத்தின் மூலம் அறியப்பட்ட ரித்விகா இப்போது பிசியான குணசித்திர நடிகை. ரஜினி நடிக்கும் கபாலி படத்தில் நடிக்கிறார். அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் ஒரு நாள் கூத்து. இந்தப் படத்தில் அவர் பண்பலை வானொலியின் ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரமேஷ் திலக் நடிக்கிறார். ரமேஷ் திலக் நிஜமாகவே ஒரு பண்பலை ரேடியோ ஜாக்கி.
ரித்விகாவுக்கு பண்பலை ரேடியோ ஜாக்கிகளின் வேலை, மேனரிசம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு முன்னணி பண்பலை நிறுவனத்தில் 10 நாட்கள் வேலை செய்தார். பண்பலை ரேடியோ ஜாக்கிகள், எப்படி வேலை செய்கிறார்கள். அவர்களின் மேனரிசம் எப்படி இருக்கிறது என்பதை கற்றுக் கொண்டார். சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதன் பிறகே நடித்திருக்கிறார்.
ரமேஷ் திலக்கும், ரித்விகாவும் ஒரே பண்பலை வானொலி நிலையத்தில் ஆர்ஜேவாக வேலை செய்கிறார்கள். அவர்களுக்குள் வரும் காதலும், பிரச்சியையும் கதையின் ஒரு பகுதி. இதில் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்களாம். இவர்கள் அட்டகத்தி தினேஷ், மியா ஜார்ஜ், புதுமுகம் நிவேதா நடித்திருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார்.