ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை முதலே பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இரவு வெளிவர உள்ள முடிவுகள் எப்படி இருக்கும் என்று இப்போதே சிலர் பேச ஆரம்பித்துவிட்டார்கள். கடந்த பல வருடங்களாக நடிகர் சங்கத்திற்கு தேர்தலே நடைபெறாமல் இருந்துள்ளது. கடந்த பத்து வருடங்களில் அறிமுகமானவர்களும் அதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் கூட முதல் முறையாக தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இதனிடையே காலையில் வாக்களித்த பின் பேசிய ரஜினிகாந்த், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார். பின்னர் பேசிய கமல்ஹாசன் தென்னிந்திய நடிகர் சங்கம் இந்திய நடிகர் சங்கமாக மாற வேண்டும் என்றார்.
அவர்களிருவரும் பேசியதைப் பற்றி சரத்குமார் அணியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சிம்புவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு, 'உலக நடிகர் சங்கமாக மாற்றினால் என்ன என்று நான் கேட்கிறேன்,” என கிண்டலான பதிலளித்தார்.
நடிகர் சங்கத் தேர்தல் , நடிகர் சங்கக் கட்டிடத்தை வைத்தே நடந்து வரும் நிலையில் இப்போது மொழிப் பிரச்சனையாக மாறி வருகிறது. எப்படிப்பட்ட முடிவு வந்தாலும் நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு திரையுலகத்தில் உள்ள சில முக்கிய சங்கங்களில் பிரிவு வரும் என்றே கோலிவுட்டில் பெரும்பாலானோர் பேசி வருகிறார்கள்.