ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திமிறு படத்தில் அதிரடி வில்லியாக நடித்தவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், அண்டாவக் காணோம் ஆகிய படங்களில் நடித்த அவர், தற்போது காஞ்சிவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜூடன் இணைந்து சில நேரங்களில் என்ற படத்தில் மீண்டும் நடித்துள்ளார். இப்படத்தில் தமிழில் லேசா லேசா, கோபுர வாசலிலே போன்ற படங்களை இயக்கிய மலையாள பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோசுடன் இணைந்து நடிகை அமலாபால் தயாரித்துள்ள இந்த படத்திலும் ஸ்ரேயா ரெட்டிக்கு ஒரு மிரட்டலான வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம். நடிப்பு என்று வந்தபிறகு எந்த லெவலுக்கு செல்ல முடியுமோ அந்த லெவலுக்கு துணிந்து நடிக்கக்கூடியவரான ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜூடன் போட்டி போட்டு நடித்துள்ளாராம். அவரது நடிப்பைப்பார்த்து பல இடங்களில் பிரகாஷ்ராஜே கைதட்டி உற்சாகப்படுத்தினாராம். அதோடு இந்த படம் எங்களுக்கு இன்னொரு காஞ்சிவரம் போன்று நிறைய நல்ல பெயரை வாங்கித்தரும் என்று கூறி வருகிறார் பிரகாஷ்ராஜ்.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை யார் இசையமைப்பாளர் என்பதை முடிவெடுக்காமல் இருந்த பிரியதர்ஷன் சமீபத்தில் தான் படமாக்கிய காட்சிகளை இளையராஜாவுக்கு போட்டுக் காண்பித்திருக்கிறார். படம் பார்த்த இளையராஜாவுக்கு பிடித்து விடவே பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகளை தொடங்க தயாராகி விட்டாராம்.