ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட உலகமே சென்ட்டிமென்ட்டில் இயங்குவதுதான். அதிலும் குறிப்பாக தமிழ்சினிமாவில் இந்த சென்டிமென்ட் மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. அதனாலோ என்னவோ அந்த வியாதி ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது போலிருக்கிறது. தற்போது அஜித் நடித்து வரும் புதிய படத்துக்கு 'வேதாளம்' என தலைப்பு வைக்கப்பட்டதை பலரும் ரசிக்கவில்லை. அதிலும் புலி படம் வெளியான பிறகு வேதாளம் என்ற தலைப்பு நகைப்பிற்கிடமாகி வருகிறது.
இந்நிலையில் அஜித் ரசிகர்களோ வேதாளம் படம் சூப்பர்ஹிட்டாகும் என உற்சாகத்தில் வளைய வருகின்றனர். என்ன நம்பிக்கையில் இப்படியொரு ஆருடத்தை சொல்கிறார்கள்? அஜித் நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களில் வி என்ற எழுத்தில் தொடங்கும் படங்கள் வெற்றியடைந்துள்ளனவாம். அந்த அடிப்படையில் வி என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் 'வேதாளம்' படமும் வெற்றியடையும் என்று அஜித் ரசிகர்கள் நம்புகின்றனர்.
வான்மதி, வாலி, வில்லன், வரலாறு, வீரம் என இதுவரை ஐந்து வி என்ற எழுத்தில் தொடங்கும் படங்களில் நடித்துள்ளார் அஜித். இதில் வான்மதி, வீரம் ஹிட் படங்கள். வாலி, வில்லன், வரலாறு ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்கள். எனவே சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வேதாளம்' படத்திலும் இந்த சென்டிமென்ட் ஒர்க்-அவுட்டாகும் என நம்பிக் கொண்டிருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.