ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன்னுடைய நண்பர் பெயரில் '24 AM STUDIOS' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி உள்ள சிவகார்த்திகேயன் அந்நிறுவனத்தின் சார்பில் படம் தயாரிக்கிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் அட்லியின் உதவியாளர் பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கும் இப்படத்துக்கு, ஒளிப்பதிவு பொறுப்பை பி.சி.ஸ்ரீராமும் மற்றும் சவுண்ட் டிசைனிங் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும், கலை பொறுப்பை முத்துராஜும், பட தொகுப்பை ஆண்டனி எல்.ரூபனும் ஏற்றிருக்கிறார்கள் என்ற தகவல் எல்லாமே பழசு.
மக்களுக்கு மனப்பாடமாகிவிட்ட செய்தி அது. இன்னும் பெயர்சூட்டப்படாத இப்படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பது முடிவாகாமலே இழுத்துக் கொணட இருந்தது. ஸ்ருதிஹாசனிடம் கதை சொல்லி, சம்பளமும் நிறைய பேசி அவரும் நடிக்க ஒப்புக் கொண்டார். போட்டோசெஷன் கூட முடிவடைந்தது. அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு தயாராகிவிந்த ரேரத்தில் திடீரென தன்னால் நடிக்க முடியாது என கழன்று கொண்டார் ஸ்ருதிஹாசன். எனவே மீண்டும் கதாநாயகி தேடும் படல் தொடங்கி, இப்போது வேறு ஒரு கதாநாயகியை முடிவு செய்துள்ளனர். 'ரஜினி முருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கீர்த்தின் சுரேஷ் தான் இப்படத்திலும் கதாநாயகி! கதை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கீர்த்தி சுரேஷ்.