இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
விஜய்யின் துப்பாக்கி, கத்தி படங்கள் 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்தின. அந்த படங்களை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள புலி படம் அந்த சாதனையை முறியடித்து விஜய்யை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படமாக அமையும் என்று அப்படம் வெளியாவதற்கு முன்பு பரபரப்பு செய்திகள் வெளியாகின.
அதோடு, ராஜமவுலியின் பாகுபலி படத்தின் வசூலை புலி தொடும் என்று ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டு வந்தது. அதற்கேற்ப இந்தியா முழுக்க அப்படத்தை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட்டு பரபரப்பு கூட்டினர்.
ஆனால், புலி வெளியாகி முதல் காட்சியிலேயே அதற்கு எதிரான கருத்துக்கள் வெளியாகி விட்டன. விமர்சனங்களும் சாதகமாக இல்லை. இதனால் விஜய் ரசிகர்களை தவிர மற்ற சராசரி ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுப்பது எதிர்பார்த்தபடி இல்லை. அந்த வகையில், விஜய்யின் முந்தைய படமான கத்தி முதல் நாள் 12.5 கோடி வசூலித்த நிலையில், புலி 10 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. அதோடு, அடுத்தடுத்து தியேட்டர்களில் வசூல் பெரிய அளவில் இல்லையாம்.
ஆக, புலி வசூலில் பின்தங்கி விட்டதால், புலிக்கு முந்தின வாரமே வெளியான நயன்தாராவின் மாயா, ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களும் தொடர்ந்து நல்ல வசூலையை கொடுத்து வருகிறதாம். இதையடுத்து, விஜய்யின் கத்தி பட சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட புலி 100 கோடி வசூல் சாதனை பட்டியலில் இடம்பெறுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.