ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரும்பாலும் நடிகர்கள்தான் கதாபாத்திரங்களுக்கேற்ப உடல் எடையை அதிகப்படுத்துவது, குறைப்பது போன்ற விசயங்களில் இறங்குவார்கள். கதாநாயகிகளைப்பொறுத்தவரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வைத்திருப்பதிலேயே கவனம் செலுத்துவார்கள். முக்கியமாக பூசினாற் போன்று சதை பிடிப்புடன் பளபளப்பாக காட்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடுமையான உடற்பயிற்சி, டயட்ஸ் கடைபிடிப்பார்கள். அதன்காரணமாக பிடித்தமான உணவுகளைகூட அவர்களால் சாப்பிட முடியாது. அந்த அளவுக்கு விரதத்தை கடைபிடிப்பார்கள்.
ஆனால் இந்த விசயத்தில் அனுஷ்கா மாறுபட்டவர், காரணம், அவரும் ஹீரோக்களை மாதிரிதான் படத்துக்குப்படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதால் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்தால் இன்னொரு படத்துக்காக எடையை அதிகப்படுத்துகிறார். அந்த வகையில், பாகுபலி படத்தின் முதல் பாகத்திற்காக எடையை அதிகப்படுத்தி நடித்த அனுஷ்கா, அதன் இரண்டாம் பாகத்திற்காக எடைய குறைத்து நடிக்கப்போகிறார். அதோடு, தற்போது ஆர்யாவுடன் நடித்துள்ள இஞ்சி இடுப்பழகி படத்தில் முதல் பாதியில் குண்டாகவும், இரண்டாவது பாதியில் ஸ்லிம்மாகவும் நடித்துள்ளார். ஆனால் அப்படி அவர் குண்டாக நடிக்க உடம்பில் சில தண்ணீர் டியூப்களை அணிந்து அதற்கு மேல் டிரஸ் அணிந்து நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் அனுஷ்காவோ அப்படி நடிக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
அவர் கூறுகையில், அந்த படத்திற்காக நான் உடல் எடையை நிஜமாலுமே அதிகப்படுத்தினேன். அதன்காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக நான் சாப்பிடாமல் இருந்த அரிசி உணவுகளை புல் கட்டு கட்டினேன். தினமும் மூன்று வேளையும் ருசியான அரிசி சாப்பாடு சாப்பிட்டேன். நிம்மதியான தூக்கம் போட்டேன். ஜிம் பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. இதுதான் எனது உடல் பெருத்த ரகசியம். என்று கூறும் அனுஷ்கா, அப்படி பெருத்த என் உடம்புக்கு மேல் இன்னும் என்னை குண்டாக காட்டக்கூடிய டிரஸ் அணிந்து நடித்தேன். ஆனால் தண்ணீர் டியூப்பெல்லாம் கட்டி நடிக்கவில்லை என்று மறுக்கிறார்.