ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், பென்சில், ஜீவா உள்ளிட்ட படங்களில் பள்ளி மாணவியாக நடித்தார் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து இப்போது அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்திருக்கிறாராம். அந்த வகையில், நான் இப்போது மெச்சூரிட்டியான நடிகையாகி விட்டேன். அதோடு, நிஜவாழ்க்கையில் கல்லூரிக்கு செல்லாத எனக்கு இந்த படத்தில் நடித்தது நல்லதொரு அனுபவமாகவே அமைந்தது என்கிறார் அவர்.
மேலும் ஸ்ரீதிவ்யா கூறுகையில், சிவகார்த்திகேயனுடன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரிய ஹிட்டாக அமைந்தது போன்று காக்கி சட்டை படத்தையும் எதிர்பார்த்தேன். ஆனால் அந்த படம் வசூல்ரீதியாக ஹிட்டடித்தது என்றாலும், நான் நினைத்தபடி எனக்கு புதிய படங்கள் கமிட்டாகவில்லை. அது சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. என்றாலும், இப்போது இந்த ஈட்டி படம் எனக்கு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்.
அதற்கடுத்து அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக், வீர தீர சூரன், காஷ்மோரா ஆகிய படங்களிலும் நடிக்கிறேன். இந்த படங்களில் கதாபாத்திரத்திற்கேற்ப மிதமான கிளாமராகவும் நடிக்கிறேன். தற்போதைய இளவட்ட ரசிகர்களின் ரசனையை மனதில் கொண்டு இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்று கூறும் ஸ்ரீதிவ்யாவுக்கு, அடுத்தபடியாக அதிரடியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உள்ளதாம்.