10 வருடங்களுக்குப் பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணி | லாரன்ஸ், ஜேசன் சஞ்சய் படங்களில் நடிக்கும் டூரிஸ்ட் பேமிலி கமலேஷ் | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா எழுதிய காதல் கடிதம்! | காதலருடன் வந்து பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜான்வி கபூர் | தெலுங்கு இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, கார்த்தி | இயல்புக்கு மீறிய படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்கள் : நாகார்ஜுனா | மலையாள படத்திற்காக பஹத் பாசிலுடன் மோதும் அர்ஜுன் தாஸ் | பழங்குடியினரை அவமதிக்கும் விதமாக பேசியதாக விஜய் தேவரகொண்டா மீது போலீஸில் புகார் | போனி கபூர், அனில் கபூரின் தாயார் மறைவு | எந்த காலத்திலும் அரசியலுக்கு 'நோ': அஜித் பேட்டி |
அரசியல் பற்றியோ, மக்களின் பிரச்சனை பற்றியோ, விவசாயம் பற்றியோ வேறு எந்தத் துறை பற்றியும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதை விட சினிமாவைப் பற்றி பகிர்ந்து கொள்வதுதான் அதிகமாக உள்ளது. அதிலும் ஒரு பெரிய நடிகரின் படம் வந்துவிட்டால் போதும் அதைப் பற்றி வரம்பு மீறி கிண்டலடித்து அந்தப் படத்தை கஷ்டப்பட்டு உருவாக்கியவர்களை காயப்படுத்தும் பல வேலைகளையும் சமூக வலைத்தளங்களில் பலர் செய்து வருகிறார்கள். அதிலும் தங்கள் அபிமான நடிகரின் போட்டி நடிகரின் படம் வெளிவந்து விட்டால் போதும் எவ்வளவு கீழ்த் தரமாக விமர்சிக்க முடியுமோ அந்த அளவிற்கு கிண்டலடிக்கிறார்கள்.
இப்படி ஒரு சிக்கலில் தற்போது 'புலி' படம் சிக்கியுள்ளது. நேற்று படம் வெளிவந்து ஒரு காட்சி முடிவதற்குள்ளாகவே தியேட்டருக்குள் இருந்து திருட்டுத் தனமாக மொபைல் போன்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சிகளை வைத்து சுறுசுறுப்பாக மீமீக்களை வைத்து கண்டபடி கமென்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். 'வாட்ஸ்-அப்' பயன்பாடும் தற்போது அதிகமாகி வருவதால் மொபைல் மூலம் அப்படிப்பட்ட கமெண்ட்டுகளும், மீமீக்களும் வெகு விரைவாக பரவ ஆரம்பித்துவிட்டன.
ஆனால், நடுநிலையான ரசிகர்கள் 'புலி' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டித்தான் வருகிறார்கள். 'பாகுபலி' படத்தை நம்பியவர்கள் 'புலி' படத்தை நம்புவதில் என்ன தவறு இருக்கிறது ? என்று அவர்கள கேட்கிறார்கள். ஒரு தெலுங்கு இயக்குனர் இயக்கி தெலுங்கு நடிகர்கள் ஹீரோக்களாக நடித்த படத்தை தமிழ்நாட்டிலும் ஓட வைத்தவர்கள்தான் நமது தமிழ் ரசிகர்கள். ஆனால், ஒரு தமிழ் இயக்குனர் இயக்கி தமிழ் ஹீரோ நடித்த படத்தை சிலர் வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள் என்றும் அந்த நடுநிலையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
'புலி' படத்தை ஆரம்பத்திலிருந்தே ஃபேன்டஸி படம் என்றுதான் கூறி வருகிறார்கள். ஹாலிவுட் படங்களில் வந்தால் நம்புவார்கள், தெலுங்குப் படங்களில் வந்தால் நம்புவார்கள், ஆனால் தமிழில் மட்டும் இப்படி வித்தியாசமாக முயற்சித்தால் கடும் விமர்சனம் எழும் என பெயர் சொல்ல விரும்பாத ஒரு இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவிலிருந்தே, அதே காதல், அதே எதிரி, அதே ஆக்ஷன் என்பதை மீறி குழந்தைகளுக்காகவும் ஒரு முழு நீளப் படத்தில் நடித்துக் கொடுத்துள்ள மாஸ் ஹீரோவான விஜய்யின் எண்ணத்தை நாம் வரவேற்றே ஆக வேண்டும் என்கிறார் அவர். குழந்தைகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள விஜய், ரஜினிகாந்த் போன்றவர்கள்தான் இப்படிப்பட்ட படங்களில் நடிக்க முடியும். மற்ற நடிகர்களால் இம்மாதிரியான படங்களில் நடிக்க முடியாது என்றும் அவர் சொல்கிறார்.
சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது கடினமான ஒன்றுதான். ஆனால், ரசிகர்களின் மோதலால் முக்கியமான படங்கள் தேவையற்ற, முதிர்ச்சியில்லாத சில விமர்சனங்களால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது. இன்று சமூக வலைத்தளங்களில் படங்களைப் பற்றி இரு வரி போடுபவர்கள் கூட தங்களை 'கிரிட்டிக்' என்று சொல்லிக் கொள்ளும் துர்பாக்கிய சூழ்நிலை உருவாகிவிட்டது. அவர்களிடமிருந்து தமிழ் சினிமாவைக் காப்பாற்றும் முயற்சியில் தமிழ்த் திரையுலகம் விரைவில் இறங்கியே ஆக வேண்டும்.