மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
எம்.சசிகுமாரை ஹீரோவாக வைத்து பாலா இயக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது பழைய கதை. தற்போது தாரை தப்பட்டை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். பழைய தில்லானா மோகனாம்பாள், ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் படங்களில் சாயலில் உருவாகி வரும் இப்படத்தை முதலில் பாலாவின் 'பி ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயரிப்பதாக இருந்தது.
'பரதேசி' படம் கமர்ஷியலாக தோல்வியடைந்ததால் தாரை தப்பட்டை படம் வெளியாகும்போது தியேட்டர் அதிபர்கள் தரப்பில் ஏதாவது பிரச்சனை செய்யக் கூடும் என்பதால் சசிகுமாரை தயாரிக்கும்படி சொல்லிவிட்டார் பாலா. சசிகுமார் தயாரிக்கும் படம் என்றாலும், படத்தின் வியாபாரத்தை பாலாவே தீர்மானிக்கிறார். அதாவது யாருக்கு விற்பது எவ்வளவு தொகைக்கு விற்பது போன்ற விஷயங்களை பாலாவிடம் கேட்டு அதன் பிறகே செய்கிறார் சசிகுமார்.
தாரை தப்பட்டை படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமையை லைகா புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டனர். லைகா உரிமையாளர் சுபாஸ்கரன் ராஜபக்ஷேவின் தொழில் கூட்டாளி என்ற குற்றச்சாட்டு நிலவுவதால், அவர்களின் மற்றொரு நிறுவனமான 'ஐங்கரன் இன்டர்நேஷனல்' நிறுவனத்தின் பெயரிலேயே 'தாரை தப்பட்டை' படத்தை வெளியிடும்படி பாலா கேட்டுக்கொண்டாராம். அதன்படியே தாரை தப்பட்டை வெளியாகிறது.