விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சமீபகாலமாக இணையதளங்கள் வாயிலாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகர்-நடிகைகளை ஓட்டெடுப்பு அடிப்படையில் தேர்ந்தெடுப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில், ஒரு வடஇந்திய இணையதளம் நடத்திய வாக்கெடுப்பில் தென்னிந்திய அளவில் சிறந்த நடிகராக தேர்வானார் அஜீத்.
இந்தநிலையில், தற்போது தந்தி தொலைக்காட்சி எடுத்துள்ள சர்வே ஒன்றில் சிறந்த நடிகராக மீண்டும் அஜித்தை ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர். அதாவது கடந்த 1990க்கு பிறகு சினிமாவில் என்ட்ரியான இளம் நடிகர்களில் யார் சிறந்த நடிகர் என்று வாக்கெடுப்பு நடத்தியுள்ளனர். இதில் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த், சூர்யா, அரவிந்த்சாமி ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்வேயில் அஜித்துக்கு 24 சதவிகிதமும், விக்ரமுக்கு 23 சதவிகிதமும், விஜய் - சூர்யா ஆகியோருக்கு தலா 18 சதவிகிதமும் வாக்குகள் கிடைத்துள்ளதாம். இதையடுத்து ஒரு பத்திரிகை நடத்திய சூப்பர் ஸ்டார் போட்டியில் விஜய்யை முதன்மைப்படுத்தியபோது விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி மகிழ்ந்ததைப்போன்று இப்போது அஜித்தின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.